கூடல் (மதுரை) எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதை பார்ப்போம். மெளவுரியர்
படையெடுப்பை பற்றி, அகம் 69 line 10, 251 line 12, 281 line 8-9, மற்றும் புறம் 175 line 6, ஆகியவை கூறுகிறது. மூன்று
மெளரியர்களில், சந்திரகுப்தர் காலம் கி.மு 322 – 298, பிந்துசாரனின் காலம்
கி.மு.298 – 273 மற்றும் அசோகரின் காலம் கி.மு 273 – 232 ஆகும். இதில் அசோகர்
தமிழ் மன்னர்களோடு நட்புடன் இருந்தார். தன் மகள் சங்கமுகியை, புத்தமதம் பரப்ப
அனுப்பி பாண்டியர்களோடு மிக நட்போடு இருந்தார். சந்திரகுப்தர் அரசவையில் தங்கி
இருந்த Megasthenes,
தனது Indica புத்தகத்தில் தமிழ் மன்னர்களோடு போர் பற்றி குறிப்பிடவில்லை.
அதாவது பிந்துசாரன் காலத்திலயே போர் நடந்து இருக்கும். பிந்து சாரன் காலமாகிய
கி.மு 298 - 273 ல் பாண்டியர்கள் பலம் பொருந்தியவர்களாக, மதுரையைத் தலைநகராகக்
கொண்டு இருந்தார்கள்.
ஹத்திபுரவில் கலிங்க மன்னன் காரவேல (கி.மு.165) கல்வெட்டு இதை
உறுதிப்படுத்துகிறது. அக்கல்வெட்டில் 113 வருட, பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் கூட்டணியை
உடைத்து விட்டதாக அவர் கூறுகிறார். கி.மு 165 லிருந்து 113 வருடம் பின் கி.மு. 278
வருகிறது. அதாவது பிந்துசாரன் காலத்தில் அவன் படையெடுத்தான் என்பதை அகம், புறம்
பாடல்களோடு ஒத்து போய், அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது.
‘சங்க கால மன்னர்களின்’ புத்தகப்படி கூடலை வென்ற நெடுந்தேர் செழியனின் காலம்
கி.மு.325 - 300. அப்பொழுதே கூடலை மூதூர் என்று அகம் 113 கூறுகிறது. ஆதலால்
மதுரையின் தொடக்க காலம் கி.மு. 500 ஆக இருக்கலாம் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் பதிவு . பாராட்டுகள் .- சுப்ரா .
பதிலளிநீக்குரொம்ப நன்றி சுப்ரா
நீக்குகி.மு.500 ஆண்டுப் பழமையான மதுரை மாநகரில் வசிப்பது நாம் பெற்ற பெரு வரம். நல்ல பதிவு. நன்றி.
பதிலளிநீக்கு- www.maduraivaasagan.wordpress.com
ஆம் சித்திரவீதிக்காரன் - நம் மதுரை 2500 ஆண்டு பழமையான நகர். இதில் நமக்கு இன்றும் அழியா சான்றாக இருப்பது அம்மன் சன்னதி வீதியில் உள்ள விட்ட வாசால் மட்டுமே. அது 2012 வரை ASI யின் கீழ் இருந்தது. இப்பொழுது பல அக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளது. மேலும் அம்மன் சன்னதி வீதியை paver blocks போட போவதாக அறிகிறேன். அப்படி செய்தால் 1 அடி உயரம் thickness கூடும். மீனாட்சி பூபல்லக்கு விட்ட வாடல் வரும்பொழுது மேலே தட்டும். மனதில் பயத்தோடு உள்ளேன் - விட்ட வாசலை இடித்து விடுவார்களோ என்று. தங்களை போன்றவர்கள் ஒன்று சேர்ந்து நம் நகரை காக்க ஆவனசெய்யவேண்டும் என்று கரம் சேர வேண்டுகிறேன்.
நீக்கு