நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

மதுரை – சில செய்திகள்


1) கீழச்சித்திரை வீதியில், புதுமண்டபத்திற்கு எதிரில் உள்ள கிழக்கு கோபுர வாசலே கோவிலுக்கு நுழைவு வாயிலாக இருந்தது. 1700களில் கோவிலில் பணியாற்றிய ஒருவர் அக்கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ததால் அவ்வாசல் பயன்பாடு குறைந்து, தற்பொழுது உள்ள அஷ்டலட்சுமி நுழைவு வாயில் பயன்படுத்தப்படுகிறது. இதுப்பற்றிய கல்வெட்டு கிழக்கு கோபுரத்தில் உள்ளது.

2) மதுரையை நான்மாட கூடல் என்று அழைப்பர். கூடல் ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன். மாடம் என்றால் வெளிசுற்று சுவரின் (compound wall) மேல் தெருவை பார்க்க அமைந்த இடம் (மதுரை காஞ்சி – நச்சினார்கினியார் உரை). Benhur (1959) ஆங்கிலப் படத்தில் ரோமானிய படையை வேடிக்கை பார்க்கும் காட்சியில் மாடத்தின் அமைப்பைப் பார்க்கலாம். நான்கு திசைகளிலும் மாடங்களுடன் கட்டிடங்கள் இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டது. (மாடம் ஓங்கிய மூதூர் - நெடுநல்வாடை 29, மாடம் பிறங்கிய மலிபுகழ்க்கூடல் – மதுரை காஞ்சி 429).

3) வீட்டின் நிலா முற்றத்தில் நீர் வந்து விழும் மகர வாயாக பருத்த வாயினையுடைய அம்பனம் (வீட்டின் கூடுவாய் மூலையிலமைந்த நீரை வீழ்த்தும் கருவி) – அதாவது drainage pipe – இது நெடுநல்வாடை 95-97

4) சுவர் செம்பினாலே செய்ததது போலும், மெல்லிய பூக்களையுடைய கொடியை வரைந்தும் இருக்கும் (நெடுநலவாடை 109-114)

5) வீடுகள் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை கொண்டதாக இருக்கும் – மதுரை காஞ்சி 357 – 361.

6) மதுரையின் தலைவானாக சிவன் – நீர், நிலம், தீ, காற்று, வானம் ஜந்தும் உடன் இயற்றிய மழுவாள் நெடியோன். தெய்த்தன்மையால் கூடிய முருகன் – இவர்களுக்கு உயர் பலி (ஆடு, கோழி) கொடுப்பதற்கு வாச்சியங்கள் ஒலிக்க (மதுரை காஞ்சி 453 – 460)

7) புத்த கோவில் – புறம் காக்குங் கடவுள் பள்ளியென்று அழைக்கப்பட்டது, அங்கு பெண்கள், குழந்தைகளை அழைத்துச் சென்றனர் – மதுரை காஞ்சி 466-467. சிவன் வழிபாட்டிற்கு அடுத்து, புத்த வழிபாடு இருந்துள்ளது.

8) வேதங்களை விளங்கும் படி பாடி, ஒழுக்கத்தோடு வாழும் பெரியோர் உறையும், குன்று குயின்றாற் போல் (கோபுரம்) இருக்கும் அந்தர் பள்ளி – மதுரை காஞ்சி 468-474

9) பூவும், புகையுடன் சாவகர் (சமனர்) வாழ்த்தி வணங்கும் இடம். இவ்விடம் செம்பால் செய்தது போல், செவந்த சுவர்கள்– மதுரை காஞ்சி 475-489

10) அறம் கூறும் அவை (நீதி மன்றம்) இருந்தது – மதுரை காஞ்சி 490-492

11) அமைச்சர்கள் கூடும் அவை இருந்தது – மதுரை காஞ்சி 493-499

12) மடிப்புடவைகள் சிறியதும், பெரியதுமாக, மெல்லியதாக இருந்தன - மதுரை காஞ்சி 519-522

13) restaurants – உணவகம் இருந்தது. அதில் இனிப்பு கடிகையும் (sancks), பால் சோறும், கண்டசக்கரை சோறும், கிழங்குகளும், புகழ்ச்சிகள் உண்டாகும் படி சமைத்த பெரிய இறைச்சிகளையுடைய சோறும் (பிரியாணி ?), இருந்தன – மதுரை காஞ்சி 532-535.
14) விலைமாதர் இருந்தனர், மயக்கி பணம் பறிக்கும் மாதர்கள் (call girls), இருந்தனர் – மதுரை காஞ்சி 559 – 583.

15) மாயோன் முருகன் பிறந்த நாளை ஒணம் என்று கொண்டாடினர் – மதுரை காஞ்சி 590 -619

16) சில கடிகைகள் – பாகில் சமைத்த மெல்லிய அடை, பருப்பு, தேங்காய், கண்டசக்கரை கூட்டி பிடித்த அப்பம் (கொழுக்கட்டை ?), இனிய பாகு கலந்த மாவு அப்பம் (கருப்பட்டி அப்பம்) – மதுரை காஞ்சி 620 – 651

17) மக்கள் தோல் செருப்பு அணிந்தனர் – மதுரை காஞ்சி 636

18) புடவைகளில் கஞ்சி இடப்பட்டது – மதுரை காஞ்சி 721

19) septic tank  இருந்து இருக்கலாம் – ‘கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க்கிடங்கினல் லெயி லுழ்ந்த செல்வர் தம்மின் கல் இடித்து இயற்றிய நாற்றமுடைய நீர் வாய் கிடங்கின் நல் மதில் இருந்த செல்வர்’ – மதுரை காஞ்சி 730

20) மடிப்புடவைகள் பருத்தி நூலிலும், எலிமயிரினாலும், பட்டுநூலினாலும் செய்யப்பட்டது – சிலம்பு 205-207


21) புடவைகள் ஒள்ளிய பூ வேலைப்பாடுடையதாக இருந்தது – மதுரை காஞ்சி 432-433

2 கருத்துகள்: