1) சுற்றுலா, அதுவும்
வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும்.
2) அதன் பயனாக, விடுதி, உணவகம், மதுரையின்
பாரம்பரிய கலை பொருட்கள் விற்பனை கூடும்.
3) மதுரையின் பாரம்பரிய சுங்கடி
கைத்தறி சேலை விற்பனை கூடும். இதன் பயனாக வேலை வாய்ப்பு கூடும்.
4) மதுரையின் காகிதகூழ்
பொம்மைகள் விற்பனை கூடும்.
5) பனைபொருட்களின் (கூடை, பெட்டி) மற்றும் உணவுப்
பொருளான கருப்பட்டி, நுங்கு, பதநீர், கிழங்கு விற்பனை கூடும். இது தென் பகுதி
மக்களின் வேலை வாய்ப்புக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்.
6) அரசு, அதன் கட்டுப்பாட்டில்
வைத்து பனங்கள்ளை தமிழர்களின் பாரம்பரிய பானமாக சந்தைப்படுத்தலாம். (Goa fenny, Russia Vodka, Fuji island local drink)
palmyrah என்ற இவ்வகை பனை உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அதில் தென்
தமிழகத்தில்தான் அதிக மரம் உள்ளது. 1960ல், 4கோடி மரம் இருந்தது.
இப்பொழுது பெரும்பாலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் சின்னமான இம்மரம்
அழியாமல் காக்க அரசால் மட்டுமே முடியும்
.
7) சுற்றுசுழல் மாசு படுவதை
கட்டுப்படுத்த, பேப்பர், பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக, மானாமதுரையிலிருந்து மண்
பானை, கப், சாப்பிடும் தட்டு, போன்ற பொருள்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தலாம். அது
நம் பாரம்பரியத்தை பறைசாற்றுவதுடன் அல்லாமல் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
8) மேலும் மதுரையைச்
சுற்றியுள்ள சமனர்படுகைகள் உள்ள இடங்களை சிறுசிறு சுற்றுலாத்தலமாக மாற்றலாம்.
அங்குள்ள மக்களை இதில் ஈடுபடுத்தினால், அவர்கள் இப்பொழுது அங்கு நடக்கும்
சமுதாயத்திற்கு புறம்பான செயல்களை தடுத்து, அவ்விடங்களை தூய்மையாக வைத்து, அக்கிராமங்கள்
பொருளதார வளர்ச்சியில் பயன் பெரும்.
9) இவ்வகை நடவடிக்கைகள் மக்கள் பெருநகர்
நோக்கி குடிபெயருவது தடுக்கப்பட்டு, அவர்கள் தங்கள் ஊரிலேயே தங்கி பொருளாதாரத்தில்
முன்னேறுவார்கள். இது பெருநகரின் அடிப்படை infrastructure ல் உண்டாகும் பழுவினைக்
குறைக்கும்.
10)
தற்பொழுது நீர்வழிசாலைகளில் கலக்கும் கழிவு நீரினைத் தடுக்கத் திட்டமிடலாம்.
அதற்கு ஏற்படும் பெரிய பொருளதார சுமையை சர்வதேச முதலீடுகள் மூலம் பெறலாம்.
11) இக்கழிவு நீரினை தற்சமயம் போல் நீண்ட தூரத்திற்கு குழாய் மூலம் கொண்டு சென்று
சுத்திகரிப்பதற்கு பதிலாக, அந்த அந்த ஏரியாக்களில், மேலை நாடுகளில் போல் அந்த ஏரியாக்களில்
சேரும் கழிவு நீரை பூமிக்கு அடியில் FRP தொட்டியில் சேமித்து, நான்கு
நாட்களுக்கு ஒரு முறை இரவில் லாரியில் கொண்டு சென்று மத்திய கழிவு நீர்
சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்தம் செய்து அந்நீரை இக்கால்வாய்களில் விட்டு
பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். அல்லது அந்த அந்த ஏரியாக்களிலேயே சிறு சுத்திகரிப்பு
ஆலை அமைத்து சுத்தம் செய்த நீரை இக்கால்வாய்களில் விடலாம்.
12) மதுரையின் அடிப்படை தேவையான flyover, பாலங்கள் கட்ட சர்வதேச நிதி
உதவி பெறுவது எளிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக