நம்ம மதுரையை UNESCO பாரம்பரிய பட்டியலில் இடம் பெற செய்வது.
மதுரை நகர்
( நான்கு மாசி வீதிக்கு உட்பட்ட பகுதி ), மற்றும் மதுரை நகரைச் சுற்றி வரும்
நீர்வழிச்சாலை (வடப்புறம் வைகை, மேற்கே புள்ளூத்தில் தொடங்கும் கிருதுமால் நதி,
தெற்கேயும் கிருதுமால் நதி, வைகையின் இரு கிளை நதிகள் – ஒன்று மேற்கே கோச்சடை
அருகே தொடங்கி, S.S.காலனியில்
கிருதுமாலோடு இனைந்து, மற்றென்று வடக்கே மங்கையர்கரசி பள்ளி அருகில் தொடங்கி,
கிழக்கே கீழவாசல் வழியாக சென்று, தெற்கே A.P.T. துரைராஜ் நாடார் பள்ளி அருகே ஆக்கிரமிப்பில் துண்டிக்கப்பட்டு
கிருதுமாலோடு இனையாமல் உள்ளது).
இவ்விரண்டும் UNESCO வின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெறச் செய்வது.
UNESCO வின் பாரம்பரிய
குழுவின் Criteria
இக்குழு 10 criteria வில் ஏதாவது ஒன்று இருந்தால் முன்மொழியலாம்
என்கிறது. இதில் மதுரையும் அதன் நீர்வழிச்சாலையும் மூன்று criteria பொருந்துகிறது.
செயல்பாட்டு
வழிக்காட்டி (operational guidelines) 77 (II) exhibit an important interchange of human values,
over a span of time or within a cultural area of the world, on developments in
architecture or technology, monumental arts, town planning or landscape design.
மதுரை நகர் 500 B.C. யிலிருந்து, தமிழர்களின் நகர் வடிவமைப்பில் (town planning) முன்னோடியாக உள்ளது. அது கோட்டை சுவர்களுக்குள்
அடங்கிய நகராக, தெருக்கள் யாவும் ஒன்றுக்கொன்று இணையாகவும் (parallel), கட்டிடங்கள் யாவும் ஒரே அளவுடையதாகவும்,
துண்டம் (sector),
தொகுதி (block) ஆகவும் நகர வடிவமைத்தல் இருந்தது.
77 (III) bear a unique or
at least exceptional testimony to cultural tradition or to civilization which
is living or which has disappeared.
இது தமிழர்களின்
கலாச்சாரத் தலைநகராக, மொழி, வாணிபம், சிறுதொழில், வேளான்மை பொருட்கள்
சந்தைப்படுத்தும் நகராக 500 B.C. யிலிருந்து இன்று
வரையுள்ளது.
77 (v) be an outstanding example of a traditional human settlement, land
use or sea use which is representative of a culture (or cultures) or human
interaction with the environment especially when it has become vulnerable under
the impact of irreversible change.
இரண்டு அல்லது
அதற்கு மேல் உள்ள நதிகள் இணையும் இடம் கூடல் (confluence) என்று அழைக்கப்படும்.
மதுரை – இரண்டு நதிகள் இணைந்து (வைகை, கிருதுமால்) அதன் நடுவில் உள்ள
நிலப்பகுதியில் அமைந்த நகரமாக, தமிழ் கலாச்சாரத்தின் தலைநகராக இன்றும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக