நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

Architectural History – கட்டிட கலை சரித்திரம்



அமெரிக்காவில் Society of Architectural Historians என்ற அமைப்பு உள்ளது. அது பண்டைய கட்டிட வடிவமைப்பைப் பற்றி அறிவதும், பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்குமான அமைப்பு. அது அமைந்து இருக்கும் கட்டிடம் 1840களில் கட்டப்பட்டது. அதையே அவர்கள் மிக போற்றுவதற்கு உரிய ஒன்றாகக் கருதுகிறர்கள். ஆனால் நாமோ 2500 பழமையான கோட்டை சுவரின் எஞ்சிய பகுதியான – அம்மன் சன்னதி வீதியில் உள்ள விட்டவாசலை ஆக்கிரமித்தும், அதை மறைத்தும் மாறுதல்கள் செய்கிறோம். 300 வருட பழைமையான ராயர் கோபுரத்தை மறைத்து கடைகளும்,  அதன் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ராவுண்டானாவை இடித்து நந்தி கட்டி மகிழ்கிறோம். 200 வருட பழமையான கீழமாசி வீதி போலிஸ் ஸ்டேஷ்னை இடித்து நவீன கட்டிடம் கட்டுகிறோம்.

உலகில் எந்த நகரத்தையையும் விட பழமையான நகரான மதுரையின் நகர அமைப்பு வியக்க வைக்கும் வகையில் உள்ளது. தெருக்களின் அகலம் 56 அடி என்பது 2500 வருடம் முந்தையை காலகட்டத்தின் அளவு கோள்படி அகலாமான தெரு. இது அவர்களின் எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதை காட்டுகிறது. குறுக்கும், நெடுக்கும் ஒன்றுக்கு ஒன்று இணையான (parallel) தெருக்களும், செக்டாராகவும், பிளாக்காகவும், தெருக்களும், பிளாக்குகளும் 14ன் பெருக்குத்தொகையில் இருப்பது – அவர்கள் வடிவமைப்பில் காட்டிய கவனம் தெரிகறது.

இப்பொழுது நாம் எதற்கு எடுத்தாலும் மேற்கு நாடுகளே சிறந்தது என்ற கருத்தில் கண்ணை மூடி ஏற்று கொள்கிறோம். உதாரணமாக சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயம் (green tribunal) அமைந்திருக்கும் கட்டிடம். அக்கட்டிடம் முழுவதும் பளபளக்கும் (கண்ணடியா அல்லது ACP sheet என்று தெரியவில்லை) ஒரு பொருளால் உள்ளது. நமது நாடு வெப்ப பிரேதசம் – குளிர் பிரேதசம்யல்ல. இந்த வடிவமைப்பு கட்டிடத்தின் உள்புறம் வெப்பமாக வைத்து இருக்கும். இது குளிர் பிரேதசத்திற்கு சரி, ஆனால் வெப்ப பிரேதசமாகிய நமது நாட்டில் உள்பகுதி அதிக வெப்பமாக இருக்கும். குளிர் சாதனம் இல்லாமல் இருக்க முடியாது. அதாவது அதிக சக்தி வேண்டும் (energy consumption). Energy ineffiecent கட்டிடம் கட்டி, பின் அதிக மின் தேவையுள்ளது ஆதலால் மின் தேவையை பூர்த்தி செய்ய அனுமின் அவசியம் தேவை என்று கூறித் திரிகிறோம்.

ஆனால் நமது கட்டிடக்கலை இயற்கையோடு ஒன்றியது. அதிக காற்று ஒட்டத்துக்கு பெரிய சன்னல்கள், சிமிண்ட்டிற்கு பதில் சுண்ணாம்பு, மேற்கு வெய்யிலின் உக்கிரத்தை (உச்சி வெயிலை விட மேற்கு வெய்யில் கட்டிடத்தை மிக சூடாக ஆக்கும்) குறைக்க உயர்ந்து வளரக்கூடிய மரங்கள், கட்டிடத்தின் முன்பகுதியில் (முடிந்தால் சுற்றிலும்) தின்னை (இது வெப்ப தடுப்பான் – air curtain) இவ்வாறு பல தொழில் நூட்பங்கள் நாம் பின்பற்றி வந்தோம். தின்னை வைக்கமுடியாத கட்டிடங்களில் பால்கனியும், sun shadeம் இருக்கும். மதுரை மாநகராட்சி 1995 (வருடம் சரியாக நினைவில்யில்லை) வருடம் வரை தட்டி வரி அல்லது sunshade வரி என்று வசூலித்து வந்தது. அப்பொழுதையை போலிஷ் கமிஷனர் கீழமாசி வீதி போன்ற வர்த்தக வீதிகளில் ஆக்கிரமைப்பை அகற்றுவதாகக் கூறி இந்த sun shadeயேயும் அகற்றினார். இது நம் கட்டிட கலையின் தன்மையை அறியாததால் செய்யப்பட்ட செயல்.

பிரிட்டனில் பிறந்த இந்திய கட்டிட கலை வல்லுனர் Laurie Baker, திருவனந்தப்புறத்தில் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றிய கட்டிட கலையை வளர்த்தார். அவரின் அனுகுமுறை, உள்ளூரில் கிடைக்கும் மூல பொருள்களை அதிகம் பயன்படுத்துவது. ஆனால் அவரின் வடிவமைப்பு கேராளவில் சில இடங்களைத் தவிர வேறு எங்கும் பரவவில்லை.

கட்டிட வல்லுனர்கள், மேற்கு நாடுகளைப் பார்க்காமல், நம் வரலாற்றில் கட்டிட கலையை பார்க்கவேண்டும். மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் கோபரங்கள் 1500ல் இடிபாடுகளை மீண்டும் கட்டி 500 வருடம் ஆகிறது, தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 வருடம் ஆகிறது. இன்றும் இவைகள் நன்றாகவே உள்ளன. ஆனால் இப்பொழுது கட்டும் கட்டிடங்களுக்கு 50-60 வருடங்களே ஆயுள் காலம். பண்டைய கட்டிடங்களிலிருந்து structural design  மட்டுமல்ல, architectural designம் நாம் கற்றுகொள்ள எவ்வளவோ உள்ளன.

5 கருத்துகள்:

  1. Vanakkam Aiyya !
    Nan vinitha ,chennai -yil aintham aandu kattida kalai payilum manavi nan en aivu arikkaikaga sanga kala thamil kattidakalyin atharangalai thedi varugiren, ithuvarai evarum kattidakalai patri kuripidavillai ungalai pondru athalal tham ethil irunthu inth seithigalai pagirinthu kondeergal endru koora mudiyuma aiyya enaku migavum uthaviyaga irkum - vinithamile@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினிதா அவர்களுக்கு, தங்கள் ஆர்வம் மிக மகிழ்ச்சி அளிக்கிறது. சங்ககால கட்டிட கலை பற்றி நேரடியாக நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் 'மதுரை காஞ்சி', 'திருமுருகாற்றுப்படை', 'நெடுநல்வாடை' மற்றும் 'சிலப்பதிகாரம்' போன்ற நூல்களில் நிறைய கட்டிட கலை பற்றி காணலாம். மேலும் திருப்பணி மாலை 82 ல் சுன்ணாம்புடன் சேர்க்கும் பொருட்கள் பற்றி உள்ளன.

      நீக்கு
    2. மிகவும் நன்றி அய்யா !! மேலும் கட்டிட கலை பற்றிய வரலாற்று சான்றுகள் தங்களுக்கு தெரிந்தால் என்னுடன் முடிந்தால் பகிரவும் அய்யா

      நீக்கு
  2. dear sir/madam,

    i searching the old the best rare names. witch is not used ever...in thamil or sangakalam? if possible can you share...asnengg@gmail.com...pls

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் எது சம்பந்தமான் சொற்களை தேடுகிறிர்கள்?

    பதிலளிநீக்கு