நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.
திங்கள், 19 ஜனவரி, 2015
கூடல் பெயர் காரணம்
Courtesy: Madras district gazetteers, Madura, 1906
கூடல் என்பதே மதுரையின் முதல் பெயர். கூடல் என்றால் தமிழ் அகராதியில் -
confluence of rivers - நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம் என்று அர்த்தம்
உள்ளது.
வைகை நதியும், கிருதுமால் நதியும், மற்றும் வைகையின் கிளை நதிகளும் மாலை போல் மதுரை சுற்றி உள்ளது.
மேலே உள்ள 1757 வருட மதுரை வரைப்படம் மற்றும் தற்சமய Google Earth Map
பார்க்கும் பொழுது, மதுரையின் வடக்கில் வைகை நதியிம், மேற்கே கோச்சடைக்கு
அருகில் வைகையிலிருந்து ஒரு கிளை நதியும், மற்றும் கிருதுமால் நதியும் -
இவ்விரண்டும் எல்லீஷ் நகரில் இனைந்து, ஒரு கிளை மதுரையின் தெற்கே
கிருதுமால் நதியாக ஒடுகிறது, வைகையில் இருந்து மற்றொரு கிளை நதி புட்டு
தொப்பில் ஆரம்பித்து, வைகைக்கு இனையாக மீன் மார்க்கெட் பின் வரை ஓடி, பின்
மதுரையின் கிழக்கில், முனிச்சாலை, கீழவாசல் வழியாக சென்று, தெற்கில் வரும்
கிருதுமாலோடு கீரைத்துரை அருகில் இனைகிறது.
மேலும் சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிருந்த காதை 176 - 83ல், கவுந்தி
அடிகள், கோவலன் மற்றும் கண்ணகியிடம், மதுரை தேவர்கள் இருக்கும் இடம்,
அதாலால் நேரடியாக கிழக்கில் உள்ள மதுரையின் தலை வாயில் செல்லாமல், மதுரையை
சுற்றி செல்வோம் என்கிறார். அதாலால் அவர்கள் வைகையில் ஒரு படகில் பயனித்து,
தெற்கே ஆள் ஆராவாரம் இல்லாத ஒரு படித்துரையில் இறங்கி சிறிது நடந்து
கிழக்கில் உள்ள மதுரையின் வாயில் கதவை அடகிறார்கால்.
இதன் மூலம் மதுரை கி.மு. காலத்திலிருந்தே நான்கு புறமும் நதிகளால்
சுழப்பட்டிருந்தது தெளிவாகிறது. ஆதாலாலேயே மதுரை கூடல் என்று
அழைக்கப்பட்டது.
குறிப்பு: மேலே உள்ள வரைப்படத்தில் வடக்கு திசை கான்பிக்கும் அம்பு
குறியிடு உள்ளதை கவனிக்கவும். (அது சாய்வாக சிறிது கோனத்தில் உள்ளதை பின்
வரும் பக்கங்களில் கூறுகிறேன்)
உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
பதிலளிநீக்குபுலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.
- பரிபாடல்
நம்ம மதுரையின் தொன்மையும், புகழும் உலகறியட்டும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்
நன்றி சித்திரவீதிக்காரன். தொடர்ந்து தாங்கள் மட்டும் அல்லது தங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லுங்கள்.
பதிலளிநீக்கு