நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

மதுரையின் நகர் அமைப்பு – பாகம் 2



மதுரையின் அடிப்படை அமைப்பு -  கட்டிடப் பகுதிகள் (Sectors), கட்டிடத் தொகுதிகள் (blocks)

மதுரைக் கோவிலின் சுவாமி சன்னதி இன்றும் அதன் மூலக்கோணம் 14 மற்றும் அதன் கர்ப்பகிரகம் 28 அடி x 28 அடி தக்கவைத்துக் கொண்டுள்ளது. குலசேகர பாண்டியன் சுவாமி சன்னதியை பெரிய கோவில் வளாகமாக மாற்ற எத்தனித்த பொழுது அவர் நகரின் மூல அமைப்பு படி 14கோணத்தையும், தெருக்கள் அகலம் மற்றும் மனையின் அளவுகள் மாறாமல் நீட்டித்த பகுதியை வடிவமைத்தார். மேலும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1216-1238) சவாமி கோவில் 9 நிலை கோபுரமும் மற்றும் சுவாமி கோவில் திருமாறன் மதில் சுவர் கட்டும்பொழுது 14கோணத்தை கடைப்பிடித்தார் ((திருவாலவாயுடையார் திருப்பணி விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்டது – மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுR.பஞ்சநதம் பிள்ளை & GIS map).

கி.பி.1310 – 1370 ல் முகமதியர் ஆட்சியின் பொழுது, பல கோவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. பின்னால் அவைகளை சீரமைக்கும் பொழுது, பழைய அஸ்திவாரத்தில் மீதே கட்டப்பட்டதால், 14 கோணத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆரம்ப காலத்திலிருந்தே நகரின் வட பகுதி குடியிருப்பாக இருந்தது. பல படையெடுப்புகளால் பெரும்பாலான மக்கள் நகரை விட்டு வெளியேறினர். பின் குடியேரும் பொழுது, பல தெருக்களை ஆக்கிரமித்து, தெருக்கள் அகலம் சுருங்கியும், சில தெருக்கள் மறைந்தும் போனாலும், இன்றும் பல தெருக்களும், பழைய கட்டிடங்களும் 14கோணத்தோடு உள்ளன. கோவில் அருகில் உள்ள பல தெருக்களும், பழைய கட்டிடங்களும் மற்றும் புது மண்டபமும்,  இன்றும் 14 கோணத்தோடு உள்ளது (GIS Map).

எல்லா தெருக்களின் அகலம் 14ன் பெருக்குத் தொகையாக உள்ளன. சிறிய தெருக்களின் அகலம் 28 அடியும், பெரிய தெருக்களின் அகலம் 56 அடியும் உள்ளன. மதுரையின் தலைவாயில் தெரு சுவாமிசன்னதி – பூக்கடை தெரு 84 அடியாக இருந்தது. இது சுவாமி கோவிலின் மகா மண்டபம் அளவான 55 அடி x 85 அடி கொண்டு உறுதிப் படுத்தலாம் (‘Madurai through the ages’ – Dr.(Miss) D. Devakunjarai, M.A., M.Ed., Ph.D – Thesis submitted to the Universsity of Madras in 1957,  - Arulmegu Meenakshi Sunareswarar Thirukkoil). ஒரு அடி வித்தியாசம் கி.பி.1452ல் மாவலிவாணாதிராயர் ((திருவாலவாயுடையார் திருப்பணி விவரம், திருப்பணிமாலை, சீதளப் புத்தகம் முதலியவற்றினின்று தொகுக்கப்பட்டது – மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தல வரலாறுR.பஞ்சநதம் பிள்ளை), இடிபாடுகளை திரும்பக் கட்டும் பொழுது வந்ததாக இருக்கும்.

 Courtesy: Temple Plan of Madurai Temple - Madras district gazetteers - Madura volI



நகர் விரிவாக்கத்திற்கு முன் இருந்த பாண்டியர் கோட்டையின் எஞ்சிய பகுதியாகிய, அம்மன் சன்னதி வீதியில் உள்ள விட்டவாசல் 14 அடி அகலமும், 14 கோணமமும் உள்ளதை Google Earth ல் அளந்து பார்க்கலாம். அதாலால் கோட்டையின் அகலம் 14 அடியும், அகழியின் அகலம் மற்றும் ஆழம் 28 அடியாக இருக்க வாய்ப்புள்ளது. Walter Hamilton ESQ அவரின் புத்தகத்தில் (A Geographical, Statistical and Historical Description of Hindustan, and the Adjacent Countries, vol. II) அகழியில் நீர் 1806 ல் 20 அடி கீழ் இருந்ததாகவும், 1810 ல் தொடர் மழைக்குப் பின் 3 அடி கீழ் இருந்ததாகவும் கூறுகிறர். இது 28 அடி ஆழம் என்ற ஊகத்தை உறுதிப் படுத்துகிறது.

கீழ்கண்டவற்றித்கு என்னுடைய CAD வரைப்படத்தையும், GIS map அல்லது Goolge Earth யையும் பார்க்கவும். கிழக்கிலிருந்து மேற்கே, கோட்டை சுவருக்கு பின் 42 அடி ஆயுதக் கிடங்காக இருந்திருக்கும் (விட்டவாசல் அடுத்து டீக்கடை மற்றும் கண்ணாடிக் கடைகள் உள்ள சிறு பகுதி – இதற்கு பின் கீழஆவணி மூல வீதி). இதற்கு அடுத்து முதல் குறுக்கு தெரு 28 அடி அகலம். இதன் பின் முதல் கட்டிட தொகுதி (block) 126 அடி நீளம், பின் இரணடாம் தொகுதி 168 அடி, மூன்றாம் தொகுதி 294 அடி, நான்கு மற்றும் ஜந்தாம் தொகுதி 168 அடியாகவும் உள்ளது. ஜந்தாம் தொகுதியின் நடுப்பகுதியில் அதாவது நகரின் சரியான மையப்பகுதியில் சுவாமி சன்னதி உள்ளது. சிவனை நடு மையமாக வைத்து நகர் உருவாக்கப்பட்டது. சுவாமி சன்னதி 28 அடி x  28 அடியாகும். முதல் 28 அடி குறுக்கு தெருவுக்கு பின் வரும் குறுக்குத் தெருக்கள் யாவும் 56 அடியாகும். ஆறிலிருந்து ஒன்பது வரையுள்ள தொகுதிகள் (blocks) முதல் நான்கு தொகுதிகள் மாதிரி முறையே 126, 168, 294, 168 அடி நீளமாக இருக்கும்.

 Madurai Plan - K.Prabhakaran



இந்த கட்டிட தொகுதிகள் யாவும் (blocks)  கீழ்மேல் செல்லும் தெருக்களால் sectorஆக பிரிக்கப்படுகிறது. மதுரையின் தலைவாயில் தெரு கீழ்மேல் செல்லும் சுவாமி சன்னதி – பூக்கடை தெரு 84 அடி அகலம் கொண்டது. இத்தெருவிற்கு அடுத்து வடபுறம் வரும் முதல் sector 84 அடியும் அதற்கு அடுத்து வரும் தெரு 28 அடியாகவும் உள்ளது. இத்தெருவிற்கு அடுத்து வரும் 2வது sector 42 அடி அகலமும், அதன் பின் வரும் தெரு 56 அடியாகவும் உள்ளது ( இத்தெரு - இடிக்கப்பட்டு, வணிக வளாகமாக கட்டப்படும் இடமும், எழுகடல் அக்ரகாரமும்). இதற்கு பின் வரும் மூன்றாவது  sectorலிருந்து ஒன்பதாவது  sector வரை அனைத்து sectorயும் 84 அடி அகலமும், மூன்றாவது மற்றும் நான்காவது sectorக்கு பின் வரும் தெரு 56 அடி அகலம் கொண்டதாகவும் உள்ளது. ஜந்தாவது  sector முதல் ஒன்பதாவது  sector வரை அதன் பின் வரும் தெருக்கள் யாவும் 28 அடி அகலம் உள்ளது. ஒன்பதாவது sectorக்கு பின் 28 அடி அகல தெருவும், ஆயுதகிடங்கும் அதன் பின் கோட்டையும் அகழியும் உள்ளது. இதே மாதிரி சுவாமி சன்னதி தெருவுக்கு தெற்கேயும் 9 sectorம் ஆயுதகிடங்கும் உள்ளது.

மொத்தம் 9 தொகுதியும் (blocks) 18 sectorம், நான்கு பக்கமும் ஆயுதகிடங்கும், கோட்டை, அகழியும் உள்ளது. இவ்வாறே மதுரை நல்ல நகர அமைப்போடு, அழகாக வடிவமைக்கப்பட்டது. 

குறிப்பு: High resolution  வரைபடத்திற்கு என்னை அனுகவும்.

6 கருத்துகள்:

  1. Hi. I am searching for the History of my family's native hamlet village named Thinnaneri near Kazhuvangulam, Madurai District. Our family is said to have vacated from that villagd, abandoning their houses, lands n cattle during 1893. I want to know what was the on going history around Thinnaneri at that time. Can u pl help me with info? My gmail ID: subanu8360@gmail.com

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், இதுவரை தங்கள் முன்னோர் வாழ்ந்த கிராமம பற்றி என் கவனத்திற்கு வரவில்லை. எனக்கு எதுவும் தெரியவந்தால், தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

    பதிலளிநீக்கு
  3. 29 மே 2020 தேதியிட்ட எனது கேள்வி குறித்து. எமது முன்னோர் வாழ்ந்த கிராமமான திண்ணநேரி குறித்த தகவல்கள் ஏதாவது கிடைக்கப் பெற்றீர்களா?

    பதிலளிநீக்கு
  4. My husband's family is said to be from Thinnaneri. There is a lovely Vinayagar Koil there and my husband recently visited it. The local person said that there was an Agraharam in Thinnaneri earlier. Also there was a Vishnu or Krishna Temple there which is now not there...It needs to be rebuilt it seems. After consulting the astrologer for the same they revealed that people with family roots in Thinnaneri will come together and complete construction of the Temple it seems. You can reach my husband in his email: menakshisundaram@sundaramandsrinivasan.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்களை கவனத்தில் கொண்டேன். தங்கள் கணவரை தேவைப்படும் பொழுது தொடர்பு கொள்கிறேன். நன்றி

      நீக்கு