இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் குழந்தை மற்றும் மழை வேண்டி, காளி, மா,
அம்மன் என்று பல பெண் தெய்வங்ளை வழிபடுகிறார்கள். இத்தெய்வங்களோடு எருமைஅரசனாக,
ஒரு மரத் தூண் அல்லது கல் தூண் அல்லது அரச
மரம் அல்லது ஆல மரம் கருதப்படுகிறது.
ஹரப்பா நாகரிகத்தில் எருமை, பெண்தெய்வம் வழிபாடு போன்றவை ஒரு முக்கியமான
முறையாகும். அது கருவளம் (fertility) பெற வழிபடும் முறை. கீழ்கண்ட சில வரப்பட்டிகையில் (tablets)
காணலாம்.
The “fig deity” seal M-1186 (DK 6847, NMP 50.295) from
Mohenjo-daro. (This is the seal stamp, not its impression.) After CISI 2: 425.
Photo JL, courtesy DAMGP.
அரசமரத்தில் பெண்தெய்வமும் அதன் முன் மண்டியிட்டு ஒருவர் வணங்குவதையும்
காணலாம்.
Intercourse of a bison bull and an anthropomorphic
priestess. Impression of a lost Indus seal excavated at Chanhu-daro in Sindh
(cf. Mackay 1943: pl. 51, no. 13). Exposure 3148 of the old print B7392 in the
Museum of Fine Arts, Boston. Courtesy Museum of Fine Arts, Boston.
சிந்து பகுதியில் சானு-தாரோ வில் தொல்வாய்வில் எடுக்கப்பட்ட முத்திரையில் ஒரு
காட்சி. ஒரு காளை நீண்ட ஆண் குறியோடும் அதன் கீழ் தலையில் அலங்காரத்தோடு உள்ள ஒரு
பெண் (அநேகமாக இளவரசி).
The U-shaped sign in an Indus inscription and a kneeling
worshipper extending a U-shaped vessel toward a sacred tree. Obverse of a
molded tablet M-478 (DK 10237, IM 10387) from Mohenjo-daro. After CISI 3.1:
403. Photo EL, courtesy Indian Museum, Kolkata.
ஒரு மனிதன் ஒரு புனிதமரத்தின் முன் மண்டியிட்டு U வடிவ பாத்திரத்தை நீட்டுவது
போல் உள்ளது.
இவைகள் எல்லாம் அரச, ஆல மரம், பெண் தெய்வம், ஆண்மையை குறிக்கும் எருமை ஆகியவை
கருவளத்திற்கு (fertility) முக்கியமானவைகளாக இருந்தது. அதுவே நம் கிராமப்புரங்களில் காணப்படும் வழிபாட்டு
முறையாகவும் இருக்கிறது. இதில் இன்று எருமைக்கு பதில் ஆடு அநேக இடங்களில் பலி
கொடுக்கப்படுகிறது. மேலும் எருமை இப்பொழுது அசுரனாக வேத மதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எருமை தேசம் என்று சங்க காலத்தில் கூறப்பட்ட ஊர் இப்பொழுது மைசூர் என்று
கூறப்படுகிறது அதாவது வட மொழியில் மகிசாசுருன். இவ்வாறு நமது வழிபடும் முறையை
வேதமதத்தினர் அவர்கள் வழிபடும் முறையோடு இணைத்து, அவர்களே முதன்மையென்ற மாயத்
தோற்றத்தினை உண்டாக்கியுள்ளனர். மேலும் நாம் ஆண்மைக்கு அடையாளப் படுத்திய எருமை
அசுரனாக மாற்றப்பட்டுள்ளது.
மற்றொரு கருவளத்திற்கு உரிய விலங்காக ஹரப்பா நாகரித்தவர் கொண்டது காரியல் (gharial)
என்ற ஒரு முதலை வகை.
ஆண் முதலையின் நீண்ட முன் மூக்கு (snout) ஒரு ஆண் குறி அல்லது படையாற்றல் சின்னமான லிங்கம் (phallus) போன்றுள்ளது. ஒரு பெண்ணை கருத்தரிக்க அது முயல்வது போன்ற ஒரு முத்திரை கீழூள்ள
படம்
The fish-eating river crocodile (gharial) and fertility.
(a). The snout of the male gharial. Photo Bo Link 2006, Wikipedia Commons. (b)
A gharial depicted as fertilizing a human female on a moulded tablet H-180
(649, NMI 32) from Harappa in the collection of the National Museum of India,
New Delhi. After CISI 3.1: 398. Photo EL, courtesy NMI.
நாட்டுப்புற வழிபாடு முறைகளை ஆராயிந்த வில்லியம் குருக் (William
Crooke 1906:112) குழந்தையில்லதா இளம் பெண்கள்
முதலைக்கு உணவு அளித்து வந்தால் குழந்தை கிடக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகக்
கூறுகிறார். மேலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹீக்லியின் முகத்துவாரத்தில்
தலைமகனை முதலைக்கு இரை கொடுக்கும் வழக்கம் இருந்ததாகக் கூறுகிறர். அவ்வழக்கம்
அப்பொழுதைய பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார் (Crooke
1926: 377, based on Ward 1811). இப்பொழுது அடையாளமாக (symbolic) சிவனுக்கு எடுக்கும் கஜன் (gajan ) வழிபாட்டில் களிமன்னில்
செய்த முதலை வாயில் சிவப்பாக குங்குமம் தடவி, அதன் வாய் அருகில் ஒரு களிமண்
குழந்தை வைத்து வணங்குகிறார்கள். மேலும் தென் குஜராத்தில் 50 கிராமங்களில்
மர முதலைகளை வைத்து வணங்கும் முறை உள்ளது.
The Devlimadi sanctuary of crocodile gods in southern
Gujarat. After Fischer and Shah 1971: pl. 2. Photo courtesy © Eberhard Fischer
1970
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக