நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

எனது எண்ணங்கள்



எனது இந்த மதுரை டவுன் பிளான் பற்றிய ஆய்வு முடிய ஜந்து ஆண்டுகள் ஆனது. 2007 மார்ச்சில் தொடங்கி 2011 மே மாதத்தில் முடிந்தது. முதலில் என் ஆய்வு எனது திருப்திக்கே செய்தேன். பின் அதன் முக்கியத்துவம் உணர்ந்து, எவ்வாறேனும் உலகத்திற்கு மட்டுமல்லாது, நமது தமிழ் சமுதாயத்திற்கு எடுத்து சென்று நம் முன்னோர்களுடைய அறிவின் வலிமையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினேன். நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமான (rational society) சமுதாயமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்று நம்பிக்கை (age of faiths) சமுதயாமாக வாழ்கிறோம். 

வரலாறு, நம் முன்னோர்களின் பெருமை பேசுவதற்கு மட்டுமல்ல. அதிலுள்ள நல்ல விடயங்களை நாம் மீண்டும் பின்பற்றவும் வேண்டும். எனது இந்த பிளாக்கை  இந்த 7 மாதத்தில் சுமார் 1000 பேர் பார்த்துள்ளனர். இதில் நான் வியந்தது என்னவெனில், இவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (geographical area) இல்லை. உலகின் ஜந்து கண்டங்களில் இருந்து பார்த்துள்ளார்கள்.

ஏசியாவில் India, Saudi, oman, Bahrain, UAE, Phillipines, China, Malaysia, Hongkong, Laos, Fiji island. ஜரோப்பாவில் London, Amsterdam(Netherland), France, Italy, Vienna (Austria), Russia. ஆப்ரிக்காவில் Egypt மட்டும்.  அமெரிக்காவில் USA, Canada. தென் அமெரிக்காவில் Mexico, Brazil. 

இவ்வளவு அகண்ட நிலப்பரப்பில் (wide area) நம் தமிழர்கள் உள்ளார்கள் என்பது என்னை வியக்க வைக்கிறது. இதில் Laos  ஒரு நாடு என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும். மேலும் Vienna  என்னை கிளர்ச்சியடையச் செய்தது. Vienna  என்றாலே என் நினைவுக்கு வருவது அதன் coffee house culture, Sigmund Freud  மற்றும் கோவையில் 70களில் ICH (India Coffee House) ல் நண்பர்களோடு காபியும், Juke box ல் (a coin operated machine that plays selected music) பாட்டு கேட்டுக் கொண்டு தீவிர விவாதங்கள் செய்தது நினைவுக்கு வருகிறது.


எனது பிளாக்கை படிப்பவர்களுக்கு தங்களது கருத்துகளை, எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ள எனது மின்னஞ்சல் – prabhakaranvak@gmail.com


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக