பாண்டியர்களின் நாகரிக வளர்ச்சி களம் - II
தமிழர்கள் என்றாலே பாண்டியர்கள்தான் முதலில் நிற்கிறார்கள். இவர்கள் ஆரம்ப
காலம் முதலே மொழிப்பற்றும், தன் எல்லையைப் பாதுகாக்க கொடூரமான வீரத்தோடும் (ruthless) இருந்தார்கள். மொழி வளர்க்க சங்கம் வைத்தார்கள். அதே போல்
தன் எல்லையை காக்க, எதிரி போரிடும்பொழுது தன் எல்லை அருகில் உள்ள எதிரியின்
ஊருக்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள், வயோதியரை விரட்டி அடித்து, அவர்கள்
இல்லங்கள், வயல்களுக்கு தீயிட்டு ஊரை நிர்மூலமாக்குவார்கள். மேலும் போர்க்களத்தில்
உக்கிரமாக போரிட்டு, அன்று மாலை போர்க்களத்தில் களவேள்வி ஒன்று நடத்துவார்கள். அது
பேய்மகளிர், இறந்த எதிரியின் மண்டை ஓட்டை அடுப்பாக வைத்து அதில் இரத்தம், எதிரியின்
மாமிசம் இவைகளை சமைத்து பேய்மகளிர் சாப்பிடுவார்கள் (பேய்மகளிர் சுடுகாட்டில்
வசிப்பர், தன் மேனி முழுவதும் எரிந்த பிணத்தின் சாம்பலை பூசி இருப்பர், பிணத்தின்
மாமிசத்தை உண்பர்) (புறம் 372 line
5-12, 356 line 1-9, 57 line 5-11, 26 line 8-11, - இவைகள் யாவும்
பாண்டியமன்னர்களால் பாடப்பட்டது). தன் மக்களை, எல்லையை காக்க பாண்டியர்களின்
உக்கிரம் இது.
இந்த மொழிப்பற்றும், எதிரியிடம் ஈவிரக்கம் இல்லாமையும் எதனால் என்பது என்னை பல
ஊகங்களுக்குத் தூண்டுகிறது. ஆனால் சிறிதளவேனும் ஆதாரமில்லாமல் கூறுவது எனக்கு
ஏற்புடையதாக இல்லை.
சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில் கிடைத்த tablets ல் உள்ள வடிவங்கள் திராவிட மொழி குடும்பத்தை குறிப்பாக ஆதி
தமிழாக இருக்க வாய்ப்புள்ளாதாக ஐராவதம் மகாதேவன், Asko Parpola, போன்ற வல்லுனர்கள்
கூறியுள்ளனர். இந்த tablets யாவும் கி.மு.3000 – 2000 காலகட்டத்தை சேர்ந்தவை. இன்றும் பாக்கிஸ்தானில்,
பலுச்சிஸ்தான் மாகாணத்தில் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த brahui என்ற மொழி பேசப்படுகிறது. மத்திய இந்தியாவில் மத்தியப்பிரதேசம்,
சட்டீஸ்கர், ஓடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா எல்லையாக கொண்ட டெக்கான் பீடபூமியில்
கோண்டு (gond) இனத்தார், திராவிட மொழியை
சேர்ந்த கோண்டி மொழி பேசுகிறார்கள். அதன் கீழ் உள்ள தென் இந்தியா முழுவதும்
திராவிட மொழியே பேசப்படுகிறது. ஆக இந்திய துணைக்கண்டம் முழுவதும் சிந்து சமவெளி
நாகரிக பகுதியிலிருந்து தென் இந்திய கடைக்கோடி குமரி வரை ஓரே மொழி குடும்பத்தை
சேர்ந்த மொழியே பேசப்பட்டுள்ளது.
சிந்து சமவெளியில் உணவுக்காக நாடோடிகளாக (hunters and gatherers) இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மை (organized agriculture) தோண்றியது, கி.மு.7000 த்தில். தென் இந்தியாவில் கி.மு. 3000 த்தில் தான் organized agriculture தோண்றியது. இங்கு
பயிரிடப்பட்டது இங்கேயே கிடைக்கும் சிறுதாணியங்கள். ஆனால் சிந்து வெளியில் Persia (today’s Iran) வை தாயகமாகக் கொண்ட
கோதுமையும், பார்லியும் பயிரிடப்பட்டது. (History of South Indian Agriculture and Agroecosystems – K.M.Krishna and
Kathleen D.Morrison, Dep. of Anthropology, Univ ofChicago.)
கொடுமணல் மற்றும் இலங்கையில், அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பானை ஒடுகளில் உள்ள தமிழ்
பிராமி எழுத்துக்கள் கி.மு.400ஆகும். கொடுமணலிலிருந்து இலங்கை வரை நீண்ட பரப்பில்
(wide area) தமிழ் பிராமி எழுத்துகள் பரவி இருப்பது –
நிச்சயம் கி.மு.400 க்கு முன்பே தமிழ் பிராமி எழுத்து முறை நன்கு வளர்ந்து இருக்க
வேண்டும்.
ஆதிச்சநல்லூர் காலம் கி.மு.1500 என்று பார்த்தோம். ஆனால் அங்கு ஏன்
தமிழ் பிராமி எழுத்துக்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.ஆதிச்சநல்லூரில் கி.மு.1500ல் தாமிர சுரங்கம் இயங்கியிருந்தால் அதற்கு முன்பே
அங்கோ அல்லது அதற்கு அருகிலோ ஒரு நகர் இருந்திருக்க வேண்டும். அக்காலம் கி.மு.2500
– 2000 மாக இருந்திருக்கலாம். அப்படியென்றால் பஃறுளி – குமரிக்கு கீழ் இருந்த
நிலப்பரப்பில் பாண்டியர்களும் அதே காலகட்டத்தில் இருந்து இருக்கவேண்டும்.
ஆக தென் இந்தியாவில் கி.மு.2500 லிருந்து நாகரிகம் வளரத்
தொடங்கி இருக்கும். இது ஹரப்பா நாகரிகத்தின் முதிர்ந்த காலமாகும். பேசிய மொழி ஆதி
தமிழ் (proto Tamil or proto
Dravidian).
பாண்டியர்களின் மொழிப்பற்றுக்கும், ruthless க்கும் காரணம் என்னாவாக இருக்கும் என்பதை ஐராவதம் மாகதேவனின் ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகத்தில் நவம்பர் 2014 ல் வழங்கிய ‘Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case
Study’ என்ற
ஆய்வுக்கட்டுரையைக் கொண்டு அடுத்த பதிவில் பார்ப்போம்.