உலக நாகரிகங்கள் அனைத்தும் நதி நீர் ஒட்டிய களங்களில் தான்
வளர்ந்தன. பாண்டியர்களும் நதி நீர் ஒட்டிய இடங்களில்தான் தங்கள் கலாச்சாரத்தை,
பண்பாட்டை வளர்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு உள்ள சிறப்பு மூன்று நதிக்கரைகளை
ஒட்டி அமைந்தது, அவர்களின் நாகரிக வளர்ச்சி. முதலில் பஃறுளி ஆற்றையொட்டியும், பின்
கடல் கோளால் அந்த நிலம் அழிந்ததால், தாமிரபரணி நிலப்பரப்பையும், கடைசியாக வைகை நதிக்கரையில்
அமைந்த மதுரையிலும் அவர்கள் கலாச்சார வளர்ச்சி அமைந்துள்ளது.
இதில் என்னை வியக்க வைத்தது அவர்களின் மொழி ஆர்வமும், தன்
நாட்டு எல்லையை காக்க அவர்கள் காட்டிய வீரமும் ஆகும். மற்ற தமிழ் மன்னர்களைக்
காட்டிலும் மொழியின் பால் அவர்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்ற கேள்வி
என்னை பல காலமாக துளைக்கிறது. மேலும் ஏன் கூடல் என்ற பெயரை மதுரை என்று மாற்றினார்கள்
என்ற கேள்வியும் உள்ளது.
இந்திய துணைகண்டம் முழுவதும் ஒரே இன மக்களே இருந்தனர் என்பதற்கு,
மானிடவியல் (anthropology) - மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்வில்
கிடைத்த குறியீடு (tablets), ஆதி திராவிட மொழியை ஒட்டி உள்ளதாக ஆய்வாளர்கள் ஐராவதம்
மாகாதேவன், Asko Parpola, போன்றவர்கள் ஆய்வு செய்து கூறுவதையும்
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Nature vol.461/24 September 2009 ல் பதிவான ‘Reconstruction
of Indian Population History’ by David Reich, Dep. Of Genetics, Hardvard
Medical School, kumarasamy Thangaraj, Centre for Cellular and Molecular
Biology, Hyderabad and others, ஆய்வில் இரண்டு வெவ்வேறு mtDNA கூறுகள் உள்ளன
- அவை ANI, ASI என்று கூறுகிறார். இதில் ANI (Ancestral North
Indian) கூறு இந்திய துணை கண்டத்தை விட்டு வெளியிலிருந்து வந்தவைகள்
என்றும், அவை western eurasians, கூறு என்று கூறுகிறார். மற்றொன்று ASI
(Ancestral South Indian), - இவை வேறு எங்கும் இல்லாமல் இங்கேயே உள்ளவை என்கிறது இந்த
ஆய்வு.
மேலும் The American Journal of Human Genetics, September 5, 2013
பதிவான ‘Genetic Evidence for Recent Population mixture in India’
by Priya Moorjani, Dep. Of Genetics, Harvard Medical School, Kumarasamy
Thangaraj, Centre for Cellular and Molecular Biology, Hyderabad and others, ஆய்வில் இந்த ANI
and ASI மக்கள் இனகலப்பு கி.மு.2000 திலிருந்து நடந்தாதாகக்
கூறுகிறார்கள். மேலும் வடக்கில் அதிகமாக கலந்துள்ளதாகவும் மற்றும் கீழ் சாதியை விட
மேல் சாதியில் இக்கலப்பு அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.கலப்பில்லாத ASI மக்கள் அந்தாமனில் உள்ள
Onge tribe மட்டுமே. இவர்களும் 100க்கும் கீழ்தான் உள்ளனர்.
ஆதிச்சநல்லூர் முடிவு வெளியிடப்படவில்லை என்று பல வலைப்பதிவுகளில்.
பார்க்க நேரிட்டது. ASI மற்றும் தமிழ்நாடு அகழ்வாய்வு துறை தனது வலைத்தளத்தில்
இவ்வாய்வுப் பற்றி கூறியுள்ளார்கள். அவர்கள் கூற்றுப்படி இதன் காலம் 1500
B.C. to 500 B.C. மற்றபடி இங்கு கண்டு எடுக்கப்பட்ட பொருள்களின் விபரம்
கூறியுள்ளார்கள்.
மேலும் Indian Journal of History of Science, 45.3
(2010) 369-394 ல், a)National Institute of Ocean Technology, Chennai, b)Department of Mechanical Engg. HCE, Padur, c)National
Institute of Ocean Technology, Marine Archaeology Branch, Chennai, d)Archaeological
Survey of India, Epigraphy Branch, Chennai ஆகியவற்றை
சேர்ந்த ஆறு ஆய்வாளர்கள் எழுதிய ‘ADICHANALLUR: A PREHISTORIC MINING
SITE’ என்ற ஆய்வு கட்டுரையில் அவர்கள் ஆதிச்சநல்லூரில் திறந்த
சுரங்கமும் (open mining – like neyveli mines) அதை சார்ந்த
உருக்கு பட்டறைகளும் இருந்திருக்கும் என்கின்றனர். மணிப்பூரில் உள்ள Luminescence
Dating Lab க்கு தாமிர alloy பொருள்கள் மாதிரி அனுப்பினார்கள். மணிப்பூர்
பல்கலைக்கழகத்தை சார்ந்த Dr.Raj Kishore Gartia Thermo-luminescence
(TL) மற்றும் Optically Stimulated Luminescence dating
(OSL) முறைப்படி ஆய்வு செய்தததில் 1500
B.C என்று கூறியுள்ளார். இங்கு இரும்பு, தங்கம் மற்றும் தாமிரம்
எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிடைத்த ஒரு மர துண்டு Tata
Institute of Fundamental Research (TIFR) Lab
ல் ஆய்வு செய்தததில் கார்பன் dating படி 775
A.D. இது 1500
B.C to 775 A.D வரை சுரங்கம் இயங்கியதாகத் தெரிகிறது. இந்தியாவில்
இங்குதான் அதிக அளவில் தாமிர கலைப்பொருட்கள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளது.
தாமிரபரணி என்ற பெயர் என்னை சிந்திக்க வைக்கிறது. பஃறுளி
பகுதி கடல் கோளில் அழிந்தபின் இங்கு வந்த பாண்டியர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியை ஆண்ட
மன்னனோடு போரிட்டு வென்று பாண்டிய அரசை நிறுவியதால் – தாமிரம் கிடைக்கும் இடத்தில்
போரில் வென்றதால் (பரணி) – தாமிரபரணி என்ற பெயரா? ஏற்கனவே கொற்கை அகழ்வாய்வில்
அங்கு கிடைத்த பொருள்கள் கார்பன் dating முலம் 780
B.C ஆகும்.
பாண்டியர்கள் பஃறுளி பகுதி கடல் கோளால் அழிந்தபின் கொற்கை பகுதிக்கு வந்துள்ளனர். ஆதலால்
800 B.C. வாக்கில் இப்போர் நடந்து இருக்கலாம்.
சமீபகாலமாக சரித்திரத்தை ஆதாரமாக கொண்டு சின்னத்திரையில்
நிறைய தொடர்களை பார்க்கிறேன். அப்பொழுது எனக்குள் ஒரு எண்ணம் ஏன் பாண்டியர்களின்
பஃறுளியிலிருந்து வைகை வரையிலான வரலாறும் இப்படி ஒரு தொடராக வரக்கூடாது என்று. காலம்தான்
சொல்ல வேண்டும். ஆனால் ஆதாரம் – excavation, epigraphy, linguistic, coinage, மற்றும்
இலக்கிய ஆதாரம் இல்லாமல் கூறுவது நம் வரலாற்றை சிதைப்பது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக