நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.
புதன், 7 அக்டோபர், 2015
புதன், 2 செப்டம்பர், 2015
கீழடி பள்ளிசந்தை அகழ்வாராய்ச்சி களம் நோக்கி ஒரு பயணம்
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் சிலைமானில்
வலது பக்கம் திரும்பி ஒரு 3 கி.மி.ல் ரோட்டிலிருந்து 1கி.மி. செல்லும்
ஒத்தையடி பாதையில் தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. பொதுவாக அகழ்வாராய்ச்சி செய்யும்
இடம் வெட்டவெளி – ஒன்றும் விளையாமல் பொட்டல் காடாக இருக்கும். ஆனால் இது ஒரு தென்னந்தோப்பிற்கு
நடுவில், இரண்டு தனியார்க்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
மதுரைக்கு மிக அருகில் – 15கி.மி.
தூரத்தில் அமைந்துயுள்ளது இவ்விடம். மதுரையின் வரலாற்று ஆய்வுக்கு ஒரு முக்கியமான
ஆதாரமாக பள்ளிசந்தை அமையவுள்ளது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் சங்க
இலக்கியங்களில் கூறப்படும் பெருமணலாக இருக்க வாய்ப்புயுள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆய்வு செப்டம்பர் மாதத்தோடு முடிக்கப்பட்டு அந்நிலத்தை
திரும்ப அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று தெரிகிறது. உரிய அனுமதி கிடைத்தால் மேலும் ஆய்வு மேற்கொள்ள எண்ணியுள்ளார்கள்.
இந்த ஆய்வில் இந்த ஊரின் கட்டிட அமைப்பு, செங்கல் அடுக்கும்
முறை, இருசெங்கலுக்கு நடுவில் உள்ள சாந்தின் (binding material) தன்மை, அஸ்திவாரம்
(foundation) தன்மை, கழிவு நீர் வாய்க்கால் அமைப்பு, மற்றும் அவர்கள்
வாழ்வியல் சார்ந்த விசயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.
இந்த அகழ்வாய்வைப் பற்றி தனது புகைப்படங்களால் நம்மை அங்கு நேரில்
சென்ற அனுபவத்தை மதுரையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஜனக் (Sriram Janak) தனது Madurai
Calling என்ற முகநூல் பக்கத்தில் (facebook page) பதிவு
செய்துள்ளார். அவரின் அனுமதி பெற்று இங்கு நான் திரும்ப பதிவு செய்துள்ளேன்.
உறை கிணறு
கழிவுநீர் கால்வாய்
செங்கல் சுவர்
சிறு போர் கருவிகள்
பானை துண்டு - மீன் சின்னத்தோடு
தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை துண்டு
நெல் குதிர்
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015
எனது எண்ணங்கள்
எனது இந்த மதுரை டவுன் பிளான் பற்றிய ஆய்வு முடிய ஜந்து ஆண்டுகள் ஆனது. 2007
மார்ச்சில் தொடங்கி 2011 மே மாதத்தில் முடிந்தது. முதலில் என் ஆய்வு எனது
திருப்திக்கே செய்தேன். பின் அதன் முக்கியத்துவம் உணர்ந்து, எவ்வாறேனும்
உலகத்திற்கு மட்டுமல்லாது, நமது தமிழ் சமுதாயத்திற்கு எடுத்து சென்று நம்
முன்னோர்களுடைய அறிவின் வலிமையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினேன். நம்
முன்னோர்கள் அறிவியல் பூர்வமான (rational society) சமுதாயமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்று நம்பிக்கை (age of faiths) சமுதயாமாக வாழ்கிறோம்.
வரலாறு, நம் முன்னோர்களின் பெருமை பேசுவதற்கு மட்டுமல்ல. அதிலுள்ள நல்ல
விடயங்களை நாம் மீண்டும் பின்பற்றவும் வேண்டும். எனது இந்த பிளாக்கை இந்த 7 மாதத்தில் சுமார் 1000 பேர் பார்த்துள்ளனர். இதில்
நான் வியந்தது என்னவெனில், இவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (geographical area) இல்லை. உலகின் ஜந்து
கண்டங்களில் இருந்து பார்த்துள்ளார்கள்.
ஏசியாவில் India, Saudi, oman, Bahrain, UAE, Phillipines, China, Malaysia, Hongkong, Laos,
Fiji island. ஜரோப்பாவில் London, Amsterdam(Netherland), France, Italy, Vienna (Austria), Russia. ஆப்ரிக்காவில் Egypt மட்டும். அமெரிக்காவில் USA, Canada. தென் அமெரிக்காவில் Mexico, Brazil.
இவ்வளவு அகண்ட நிலப்பரப்பில் (wide area) நம் தமிழர்கள் உள்ளார்கள் என்பது என்னை வியக்க வைக்கிறது. இதில் Laos ஒரு நாடு என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும்.
மேலும் Vienna
என்னை கிளர்ச்சியடையச் செய்தது. Vienna என்றாலே என் நினைவுக்கு வருவது அதன் coffee house culture,
Sigmund Freud மற்றும் கோவையில் 70களில் ICH (India Coffee
House) ல் நண்பர்களோடு காபியும்,
Juke box ல் (a coin operated machine
that plays selected music) பாட்டு கேட்டுக் கொண்டு தீவிர விவாதங்கள் செய்தது நினைவுக்கு வருகிறது.
எனது பிளாக்கை படிப்பவர்களுக்கு தங்களது கருத்துகளை, எண்ணங்களை என்னோடு
பகிர்ந்து கொள்ள எனது மின்னஞ்சல் – prabhakaranvak@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)