நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

சனி, 28 செப்டம்பர், 2019

கீழடி அகழ்வாராய்ச்சியும், சங்க இலக்கியமும்


353 செ.மீ (11.58 அடி) ஆத்தில்  கிடைத்த  பொருள்கள் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், கீழடியின் காலம் கி.மு. 580 என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 200 செ.மீ (6.50 அடி) ஆத்தில் கிடைத்த பொருள்கள் பகுப்பாய்வில், அதன் காலம் கி.மு 214 மற்றும் கி.மு 174 என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கி.மு. 600 லிருந்து 174 வரை அந்த ஊர் இருந்தற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது.

இதில் கால அளவு மற்றுமல்லாது நாம் கவனிக்க வேண்டியது, இங்கு கிடைத்த பொருள்கள். இலக்கியம் என்று கூறி சரித்திர ஆதாரமாக ஏற்க மறுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில், குறிப்பாக மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, - அடங்கிய பத்துபாட்டு, அகம், புறம், மற்றும் சிலம்பு, இவைகளில் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

மதுரை காஞ்சி 

1)     வரி 90-91            -           கிணறு
2)     வரி 93                 -           பூட்டு
3)     வரி 258              -            கரும்பு இயந்திரம்
4)     வரி 315-316         -      முத்து, சங்கு கீறியறுத்த வளையல்
5)     வரி 400-401        -           சங்கு சுட்ட சுண்ணம்பு
6)     வரி 421-422         -          செம்பில் செய்த பொருள்
7)     வரி 433                -          சிவந்த நுண்ணிய பூவேலைபாடுடைய சேலை     
8)     வரி 519-22          -             சிறிய, நெடிய மடிப்புடவை
9)     வரி 637-641       -        கூரிய கத்தி
10)  வரி 721               -           கஞ்சியிட்ட புடவை
11)  வரி 730                  -         கல்லால் செய்த சாக்கடை நீர்கடத்தும் வாய்க்கால்        

புறம்

1)     பாடல் 24 – வரி 32-33       -    வளையல்
2)     பாடல் 233 – வரி 3-4          - பொன்னாற் செய்யப்பட்ட திகிரி(சக்ராயுதம்)
3)     பாடல் 274 – வரி 1-2          -   பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை

திருமுருகாற்றுப்படை

     வரி 15                                       -     பூவேலைப்பாடு உள்ள சிவப்பு உடை
    
நெடுநல்வாடை

    வரி 95-97                                  - மாடியில் விழும் மழை நீர் கடத்தும் குழாய்

சிலம்பு ஊர்காண் காதை

1)     வரி 145-147                    -    சுடுமண் ஒடு, செங்கல்
2)      வரி 205-207                   -   பருத்தி, எலிமயிர் (linen), பட்டு நூல் என பலவகை நூல்களால் செய்யப்படட மடிப்புடவை , ஆடை  
          
ஆதலால் இந்திய வரலாற்றை, சங்க இலக்கியங்களை கொண்டு மாற்றி எழுத வேண்டும்.

திங்கள், 15 ஜூலை, 2019

மதுரை நகருக்குள் அகழாய்வின் அவசியம்

https://tamil.thehindu.com/tamilnadu/article28427038.ece/amp/?__twitter_impression=true

 அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தும் இடமா?- மதுரையில் பார்க்கிங் வசதிக்காக தோண்டியபோது தென்பட்ட பழங்கால மண்டபம்

Published : 14 Jul 2019 09:41 IST
Updated : 14 Jul 2019 09:41 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்படும் இடத்தைத் தோண்டியபோது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.

*********************************************************************************

மேற்கண்ட செய்தி என் மனதை பதர வைக்கிறது. ஏற்கனவே, கீழமாசி வீதி காவல் நிலையம், விளக்குதூண் அருகில் தெருமட்டத்திலிருந்து 10 அடிக்கும் கீழே இருந்த கழிப்பறை,   கீழ ஆவணிமூல வீதியில் புதுமண்டபம் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ரவுண்டாணா, போன்ற மதுரையின் பழமை சின்னங்கள், சமீபகாலங்களில் அழிக்கப்பட்டன.

சங்ககால, மதுரை காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் அங்காடி அமைந்த இடம் என்று என் ஆய்வில் குறிப்பிட்ட இடம் இது. இதே போல் மீனாட்சி பார்க், அரண்மனை அமைந்த இடம். இவை இரண்டையும் அகழ்வாய்வு செய்யவேண்டும் என்று அப்பொழுதைய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

இப்பொழுது அதே இடத்தில் இக்கண்டுப்பிடிப்பை மூடி மறைக்கவே முயல்வார்கள். தற்பொழுது உள்ள மதுரை பாரளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடசன், மதுரையின் பழமையை காக்க நினைப்பவர். அவர் மதுரை பாரம்பரிய நகர் என்று அறிவிக்க நினைப்பவர். அவர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றால் ஏதாவது நடக்கும் என்று எண்ணுகிறேன்.

இவரின் அறிமுகம் யாருக்கவாது இருந்தால், எனக்கு அவரை சந்திக்க உதவவும்.

வியாழன், 19 அக்டோபர், 2017

கீழடி காலம் - மேலும் சில தகவல்கள்

கீழடி பற்றி The Hindu நாளிதழில் கீழ்கண்ட தகவல்கள் 1-10-2017 வெளியாகியுள்ளன.


இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்வது, 2016 ஆண்டு வரை தோண்டப்பட்ட குழிகள் 4.5 மீட்டர் (14.75 அடி) ஆழம். அதில் கார்பன் கால நிர்ணயத்திற்கு (carbon dating) எடுக்கப்பட்ட மாதிரிகள் 2 மீட்டர் (6.50 அடி) ஆழத்தில். இதன் கால அளவு 2160+30 மற்றும் 2200+30 அதாவது கி.மு.174-144 மற்றும் கி.மு.214-184. இது 6.50 அடி ஆழத்தில் கிடைத்த மாதிரி. இதுவே இன்னும் ஆழத்தில் கிடைக்கும் மாதிரியாக இருந்தால் இக்காலத்திற்கு முந்தியதாக இருக்குமேயல்லாமல் பிந்தியதாக இருக்காது.


தற்பொழுதைய ASI கண்காணிப்பாளர் திரு. P.S.ஸ்ரீமான் இந்த மூன்றாவது அகழ்வாய்வில் உடைந்த, துண்டு துண்டான சேதாரமான சுவர் இருந்ததாகவும், அது முந்தைய கட்டுமானமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அதில் எடுக்கப்பட்ட மாதிரிகள் கார்பன் கால ஆய்வுக்கு பின் கீழடியின் காலம் இன்னும் பின்னால் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

‘சங்ககால மன்னர்களின் கால நிலை’ – Dr.பத்மஜா ரமேஷ், V.P.புருஷோத்தமன், அவர்களின் புத்தகத்தின் படி கி.மு 325- 300ல் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியன் நெடுந்தேர் செழியன் என்ற நெடியோன் (இவன் பூதபாண்டியன் – தேவி பெருங்கோட் பெண்டு வின் மகன்), அப்பொழுது மதுரையை ஆண்ட அகுதையைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றி, மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை விரிவுபடுத்தியதாக அகம், புறம் பாடல்களில் உள்ளதை குறிப்பிடுகிறார்கள்.

பாண்டியர்கள் போரிடும் முறையில் முக்கியமானது, எதிரி நாட்டின் எல்லையில் உள்ள ஊர்களை அழித்து வீடுகளை தரைமட்டமாக இடித்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை விரட்டியடித்து, வழுவான ஆண்களை போர்க் கைதியாக பிடிப்பது (புறம் 57 காரிக்கண்ணனர், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய பாண்டியன் நன்மாறனுக்கு எதிரியை அழிக்கும் முறை பற்றி கூறுவது) அவ்வகையில் பார்க்கும் பொழுது மதுரை மீது படையேடுத்து வரும்பொழுது, வழியில் உள்ள கீழடியை அழித்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

இப்பொழுது கி.மு 214 என்றுள்ள கார்பன் கால நிர்ணயம் (carbon dating), தற்பொழுது சேதமடைந்த சுவற்றில் எடுக்கப்பட்ட மாதிரியின் கார்பன் கால நிர்ணய  சோதனைக்கு பின், கி.மு.325-300 என்று முடிவு வந்தால், நெடியோனின் படையெடுப்பு காலத்தோடு ஒத்துப்போவதால் அவன் படையெடுப்பின் காரணமாக கீழடி அழிந்ததை உறுதிப்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கார்பன் கால நிர்ணயத்திற்கு எடுக்கும் மாதிரிகள் கரிமச் சேர்மானம் (organic matters) உள்ள பொருட்கள் மட்டுமே ஆகும். சில உதாரணங்கள் – மரத்துண்டு, மரக்கரி, எலும்பு, எரிந்த எலும்பு, நத்தை ஒடுகள், தேங்காய் நார்க்கழிவுகள், தந்தம், காகிதம், துணி, விதைகள், தாணியங்கள், சமைத்த உணவுகள், களிமண் செங்கல் நடுவில் உள்ள வைக்கோல், சுட்ட செங்கல்  போன்றவைகள்.