நம் வழிபாட்டு முறை – தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும், முக்கியமாக
கிராமப்புரங்களில் வழிபடும் முறை ஹரப்பா
நாகரிகத்தை ஓட்டியேயுள்ளது.
Asko Parpol வின் “The roots of Hinduism’ த்தில் ஹரப்பா நாகரிகத்தில் வழிபடும் முறையும், இப்பொழுதும் நம்
கிராமப்புரங்களில் வழிபடும்முறையும் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். மேலும்
ரிக்வேத்தில் இதைத் தழுவியே நிறைய விசயங்கள் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.
இன்றும் நமது கோவில் விழாக்களில் எருமை பலியிடுவது உண்டு. உத்ரக்காண்ட்
மாநிலம், பாரி மாவட்டம், புங்கால் என்ற கிராமத்தில் (டேராடூன் அருகில்) 13 எருமை
மாடுகள் பலியிடப்பட்டன. இந்த பலி கொடுக்கும் நிகழ்வு அங்கு பல வருடங்களாக உள்ள ஒரு
மரபு. இது 2010 செய்தி (பார்க்க http://tamil.oneindia.com/art-culture/essays/2010/uttarakhand-animal-sacrifice-buffaloes-goats.html). நம் தமிழ்நாட்டில்
அந்தியூர் பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் எருமைக் கிடா பலி கொடுக்கப்பட்ட்து.
இது 2015ல் நடந்த நிகழ்வு (பார்க்க http://www.tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=72551). இது ஹரப்பா நாகரிகத்தில்
உள்ள ஒரு பழக்கம்.
A hero places his foot on the horns of a water buffalo while
spearing it in front of an erect cobra. One side (C) of the molded tablet M-492
(DK 8120, NMI 151) from Mohenjo-daro in the collection of the National Museum
of India, New Delhi. After CISI 3.1:396. Photo EL,courtesy NMI.
மேற்படி படத்தில் நாகப்பாம்பு முன் எருமையை ஒரு மனிதன் ஈட்டியால் குத்தி ஒரு
காலை அதன் கொம்பின் மேல் வைத்துள்ளான். இது எருமை பலியிடலைக் குறிக்கிறது.
Jumping over the water buffalo in Indus seals. (a) The seal
M-312 (DK 8321, NMI 147) from Mohenjo-daro in the collection of the National
Museum of India, New Delhi. After CISI 1:385. Photo EL, courtesy NMI. (b) An
Indus seal from Banawali. Photo courtesy ASI.
மேற்படி படத்தில் எருமையை பலர் தாவி கொம்பைப் பிடிக்க முயல்வதைக் காணலாம்.
படம் b யில் பெண்களும்
இருப்பதைக் காணலாம்.கலித்தொகை 101-107 ல் ஏறு தழுவல் பற்றி கூறப்பட்டுள்ளது.
தற்சமயம் ஜல்லிக்கட்டு என்ற கூறப்படும் விளயாட்டு ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே
இருப்பதைக் காணலாம்.
Jarl Charpentier (1926)
தனது கிராம வழிபாடுகள் தொகுப்பில், இந்தியாவின் 19ம் நூற்றாண்டு கிராம வழிபாடு
முறைகள் பற்றி விவரிக்கிறர். அரச மரம் அல்லது ஆல மரத்தின் கீழ் ஒரு கல் அல்லது
சிலை வைத்து அதற்கு குங்குமம், மஞ்சள், எண்ணை இவைகளைத் தடவுவது, இரத்தத்தைத்
தடவுவதற்கு சமமானதாகக் கூறுகிறர். தென் இந்தியாவிலும், வங்காளத்திலும் பலியிடும்
மிருகங்களின் (எருமை, ஆடு) இரத்ததை ஊற்றும் வழக்கம் உள்ளதாக கூறுகிறர்.
தூத்துக்குடி அருகில் ஒட்டப்பிடாரம் அருகில், புதியம்புத்தூர் என்ற ஊரில்
பத்ரகாளியம்மனுக்கு ஆடு பலி கொடுக்கும் பொழுது, அதன் தலை சாமி நோக்கி இருக்கும்படி
வைத்து வெட்டி அதன் இரத்தம் சாமி மேல் படும்படி செய்வார்கள். மதுரை அருகே
திருமங்கலத்திலும் பத்ரகாளியம்மன் வழிபாட்டில் சில வருடங்கள் முன் வரை இப்பழக்கம்
இருந்ததாகத் தெரிகிறது.
A water buffalo, 31 cm high and 25 cm long, standing on a
platform attached to four solid wheels. One of four bronze sculptures weighing
together over 60 kg, found in a hoard at Daimabad, Maharashtra, the
southernmost Indus site, and ascribed to the Late Harappan or Chalcolithic
period. Photo Asko Parpola.
Water buffalo on painted pots of the Early Harappan Kot Diji
culture. (a) A pot excavated at Kot Diji. After Khan 1965: 58, fig. 16.
Courtesy DAMGP. (b) A pot imported to the Northern Neolithic site of Burzahom
in Kashmir, period II. After Kaw 1989: 88, fig. 7. Courtesy ASI.