இபொழுது நடக்கும் சில விசயங்கள் வருத்தத்தையும், துயரத்தையும் உண்டாக்குகிறது.
மொழித்திணிப்பு – நேரடியாகவும், மறைமுகமாகவும், உண்ணும் உணவில் தலையீடு, மதரீதியாக
அணி சேர்ப்பது, தலித்கள் மீது காழ்ப்புணர்ச்சி, எதிர்கருத்துக்கள் வன்முறை மூலம்
அடக்கப்படுவது, என்று ஏராளம்.
மொழி என்று வரும்பொழுது பாண்டியர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள்
தமிழ் மொழி மீது அதிகப் பற்று வைத்ததற்கு, அவர்கள் தாய் மொழி அழிக்கப்பட்டதே காரணம்.
கி.மு 2000 த்தில் ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சியடைந்தபொழுது, ஒரு பிரிவு மக்கள் ஆஸ்திரேலியா
நோக்கி நகர்ந்துள்ளார்கள் – ‘Max Planck Institute for Evolutionary Anthropology in
Leipzig, Germany’ யை சேர்ந்த Mark Stoneking செய்த ஆய்வின் படி சுமார் 4000 வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின்
வடபகுதியில் உள்ள பூர்விக குடியினர் மரபணுக்களில் இந்தியர்கள் மரபணுக்கள் உள்ளதாக
கண்டறிந்துள்ளார். அவ்வாறு வந்தவர்கள் அனேகமாக கடல் மார்க்கமாகவே வந்திருப்பார்கள்
என்று கணித்துள்ளனர். அதாவது ஹரப்பா நாகரிக முடிவில், ஒரு பகுதி மக்கள் மட்டும் இந்தியாவின்
தென் பகுதி வந்து அங்கேயிருந்து கடல் மார்க்கமாக சென்றுள்ளார்கள்.
மேலும் அதே காலக்கட்டத்தில் இனக்கலப்பு நடக்க ஆரம்பித்து, சாதிய முறை வந்துள்ளது.
ஹார்ட்வெர்ட் மெடிக்கல் ஸ்கூலும், செண்டர் ஃபார் செல்லூலர் அண்டு மாலிக்குளர் பயாலஜி,
ஹைதராபாத்தும் இணைந்து நடத்திய ஆய்வில் கி.மு.2000 வாக்கில் இனக்கலப்பு ஆரம்பித்து
கி.பி. ஆரம்பம் வரையிருந்தாகவும், ஆரம்பத்தில் குறைவாகவும் பின் படிப்படியாக
அதிகமாகவும் இருந்தாகக் கூறுகிறார்கள். இதில் இரண்டு இனமாக அவர்கள் கூறுவது ANI (ancestral north
indian), மற்றும் ASI (ancestral south
indian). இதில் ANI என்பது மத்திய ஆசிய, கக்குசியன் (Caucasians), middle eastners மற்றும் ஜரோப்பியரை சார்ந்த
மரபு அணுவாகவும், ASI என்பது இங்கேயே இருந்த இனத்தவர்களாகவும் ஆகும். கலப்பு இல்லாத ASI மக்கள் இன்றும் அந்தமானில்
உள்ள ஒங்க் இனத்தவர்
மேலும் இந்த இனக்கலப்பு கி.மு.1500 வாக்கில் வேகம் கூடியுள்ளது. அதாவது ஆரியர்கள்
படையெடுப்புக்குப் பின் அதிகமாகியுள்ளது. ஆரியர் என்று ஒரு இனம் இல்லை, இது ஆங்கிலேயர்
புனைந்தது என்பவர்களுக்கு – சங்க இலக்கியங்களில் ஆரியப் படை கடந்த பாண்டியன்
நெடுஞ்செழியன் என்று ஒரு மன்னனைப் பற்றி குறிப்புள்ளது.
இந்தியத் துணைகண்டம் என்பது இன்றைய பாகிஸ்தானையும் உள்ளடக்கிய பகுதியாகும்.
ஹரப்பா நாகரிகம் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலம்(ஆப்கான் எல்லை) தொடங்கி ராஜஸ்தான்,
குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இதற்கு கீழேயுள்ள தென்
இந்தியாவிலும் அதே இனத்தவரே வாழ்ந்துள்ளனர். நகரமைப்பு முறை அங்கு இருந்து இங்கும்
பரவியது (ஆதிச்சநல்லூர், கீழடி, மதுரை).பாகிஸ்தான் மக்களின் மரபு அணுக்கள் முழுவதும்
தற்சமயம் மேற்கு ஆசியா நாட்டு மக்களை ஒட்டியுள்ளது. அதாவது அங்கு இருந்த ASI (பூர்விக இனத்தவர்) இன மக்கள்
அணைவரும் புலம் பெயர்ந்து கங்கை சமவெளியிலும், தென் இந்தியாவிலும் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியா என்ற ஒரு நாடே இல்லை, தமிழர்கள் நாங்கள் தனி, பிரிட்டிஷாரின்
சூழ்ச்சியே இது எனறு கூறுபவர்களுக்கு – புறம் 3 வரி 1-4
“வடா அது பனி படு நெடுவரை
தெனா அ துரு கெழுகுமரியின்
குனா அது கரைபொரு தொடுகடற்
குடா அது தொன்றுமுதிர் பெளவத்தின்”
புறம் 17 வரி 1-2
“ தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலாலெல்லை”
என்ற இரு பாடல்களிலும் வடக்கு எல்லை இமயம் என்பதைக் கூறுகிறது. இது ஒரே இன
மக்களே வாழ்ந்தனர் என்பதைக் குறிக்கிறது.
இவ்வாறு ஆரியர்களின் படையெடுப்புக்குப் பின் தென் புறம் வந்தவர்களே
பாண்டியர்கள். அவர்கள் அனேகமாக வணிகர்களாக இருந்து இருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்
அங்கு இருந்து இங்கு வந்தவர்கள் வேளிர் மக்கள். மு.இராகவயங்கார் அவர்களின் “வேளிர்
வரலாறு” (இவருடைய ஆய்வு ராயல் ஏசியட்டிக் சொசிட்டியில் இடம் பெற்றுயுள்ளது) படி இவர்களின்
காலம் கி.மு.1300 ஆக இருக்கலாம்.
புறம் 201
“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”
என்று வேளிர் குலத்தோர் துவாரைகையில் இருந்து 49 தலைமுறைக்கு முன் இங்கு
வந்ததாகக் கூறுகிறது.
பாண்டியர்கள் குமரிக்கு கீழுள்ள நிலப்பரப்பில்
ஆட்சி செய்துள்ளார்கள், அப்பகுதி கடல் கோளால் அழிந்த பின், கொற்கைக்கு கி.மு.780
ல் வந்துள்ளார்கள் (கொற்கை அகழ்வாராய்ச்சியில் அதன் காலம்). பின் கி.மு. 325
வாக்கில் அப்பொழுது கூடலை ஆண்ட அகுதையை வென்று மதுரையைக் கைப்பற்றினார்கள்.
இதில் இரண்டு விசயம் – அவர்களின் மொழிப் பற்று. அதை பேணி வளர்ப்பதற்கு சங்கம்
வைத்து வளர்த்தார்கள். முதல் சங்கம் குமரிக்கு கீழுள்ள நிலப்பகுதியிலும், பின்
இரண்டாவது சங்கம் கொற்கையிலும், கடைசங்கம் மதுரையிலும் வைத்து தமிழை வளர்த்தார்கள்.
இதற்குக் காரணம் ஆரியர்களின் மொழி அழிப்பு, ஆதலாலேயே மொழி மீது அளவிட முடியாத
பற்று கொண்டார்கள். மற்றொரு விசயம் போர் முறை. ஆரியர்கள் போர் முறையில் சிறந்து
விளங்கினார்கள். ஆதலாலேயே அவர்கள் படையேடுத்து வெல்ல முடிந்தது. இதன் காரணமாகவே
பாண்டியர்கள் போர் முறையில் உக்கிரமாக இருந்தார்கள்.
இப்பொழுது அதே மொழி அழிப்பு நடக்கின்றது. எந்த மொழியையும் நமது வேலையின்
அவசியம் கருதி படிப்பது தவறில்லை. ஆனால் நமது தாய் மொழியை அழித்து வேற்று மொழியைப்
படிக்க நிர்ப்பந்திப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.