நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021
திருநெல்வேலி மாவட்டத்தில் பாண்டிய நாட்டு குடவரை கோவில்கள் – I
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பாண்டியர்களின் குடவரை கோவில்களைப் பற்றி நாம் பார்ப்போம்.
மலையடிக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோவில், வீரசிகாமணி கைலாசநாதர் கோவில், திருமலபுரத்தில் உள்ள பசுபதிஸ்வர் கோவில் – இது ASI யின் கீழ் உள்ளது, மற்றும் அனையூரில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி கோவிலும் உள்ளது. இதில் முதலில் மலையடிக்குறிச்சி மகாதேவர் கோவிலைப் பார்ப்போம்.
இது பாறையைக் குடைந்து கல் தூண் அமைத்து கர்ப்பக்கிரகத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி,600 -650 ஆக இருக்கக்கூடும். இந்தத் தூண் அமைப்பு அதை உறுதி செய்கிறது. பின்னால் கி. பி. 700-800 ல் இந்த குடவரைக்கு முன் கல் தூணுடன் கூடிய ஒரு மண்டபமும் அதில் ஒரு தாயார் சன்னதியும் உள்ளது. தமிழர்களின் வழிபாடு முறையில் குறிப்பாக பாண்டியர்களின் கோவில்களில் இறைவன் தனியாகவே இருப்பார், அது ஆண் தெய்வமானலும், பெண் தெய்வமானலும் தனியாகவே இருப்பார்கள்.இறைவன் துணையோடு இருப்பது கி.பி.900 பின்னர்தான். திருமுருகாற்றுப் படையிலோ, அல்லது, மதுரை காஞ்சியிலோ இறைவனை துணையோடு வர்ணிக்கவில்லை.
இக்கோவில்களுக்கு ராஜபாளையம் – தென்காசி சாலையில், வாசுதேவ நல்லூர் அடுத்து சுப்பிரமணிபுரம் என்ற ஊர் தாண்டி சிறிது தூரத்தில் இடது பக்கம் செல்லும் சாலையில் செல்லவேண்டும். மலையடிக்குறிச்சி அரசாங்க பள்ளிக்கு அருகில் உள்ளது இந்த கோவில். இங்கு உள்ளே செல்லும் பாதையில் ஒரு ஆர்ச் அமைத்துள்ளனர் அதில் கி. பி. 600 ஆம் ஆண்டை சேர்ந்த குடவரை கோவில் என்று எழுதி இருக்கும். இங்கு கதவு பூட்டியிருக்கும் நீங்கள் சீனிவாசன், போன் 7708035222 க்கு அழைத்து கூப்பிட்டால் வந்து கதவை திறந்து விடுவார்கள். உங்கள் போனில் மேப்பில் Malayadikurichi Rock cut temple என்று தேடி, போகும் பாதைக்கு அதை வழிகாட்டியாக வைத்துக் கொள்ளவும்.
வெள்ளி, 2 அக்டோபர், 2020
சில விளக்கங்கள்
எனது நூல் வெளியீடு சம்பந்தமான பின்னோட்டங்களுக்கு (feedback) சில விளக்கங்களைக் கொடுத்துள்ளேன்.
முதலில் கிண்டில் வெளியீடு போனில், டேப்லட்டில் படிக்கமுடியுமா அல்லது kindle device வேண்டுமா என்று அணேகருக்கு சந்தேகம் உள்ளது. உங்கள் போன் அல்லது டேப்லட்டில் இந்த நூலை படிக்கலாம். Kindle device தேவையில்லை. Play storeல் kindle app பதிவிரக்கம் செய்து படிக்கலாம். மேலும் உங்களிடம் உள்ள போன், டேப்லட் அணைத்திலும் பதிவிரக்கம் செய்து அவைகளை synchronize செய்யலாம். ஆதலால் நீங்கள் வாங்கிய நூல்கள் அணைத்தும் எதில் வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கு ஏற்ப படிக்கலாம். மேலும் உங்கள் அமேசான் கணக்கே இந்த appக்கும் பொருந்தும்
பேப்பர்பேக் தவிர்த்து ஏன் கிண்டில் என்ற கேள்விக்கு பதில் -- பேப்பர்பேக் அளவு 5.5” x 8.5” ஆகும். இந்த அளவில் ஒரு வரைபடத்தைத் (maps) தெளிவாகப் பார்ப்பது சற்று சிரமம். ஆனால் கிண்டில் ebookல் enhanced typesetting உள்ளது. அதில் font அளவு, notes, highlighter, மற்றும் உள்ளடக்கம் மெனு உள்ளது. நீங்கள் உள்ளடக்கத்தில் எந்த உப தலைப்புக்கு போக வேண்டுமானாலும் அதை கிளிக் செய்தால் அந்த பகுதிக்கு சென்றுவிடும். மேலும் ஒரு வரைப்படத்தில் விரல் வைத்து அழுத்தினால் zoom option வரும். அதை அழுத்தினால் அந்த வரைபடம் பெரிதாகும் நீங்கள் உங்கள் விருப்ப அளவில் பார்க்க 2 விரல் வைத்து ஸ்கீரினில் விரித்தால் படம் பெரிதாகும். இந்த வசதி நான் மதுரை வடிவமைப்பில் கூறும் அளவுகள், கோணங்களைப் பற்றி நீங்கள் நன்கு உள்வாங்க உதவும்.
மேலும் enhanced typesetting நீங்கள் போனில் படித்தால் கூட உங்கள் கண்ணுக்கு அழுத்தம் (strain) தராது.
இப்பொழுது எனது நூல் வெளியீடு அக்டோபர் 6 க்கே வெளியிடப்படும். அணைவரும் படித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
புதன், 30 செப்டம்பர், 2020
மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும்
மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும் என்ற தலைப்பில் எனது ebook amazon.in வழைத்தளத்தில் இப்பொழுது preorder காக பட்டியல் இடப்பட்டுள்ளது. நூல் அக்டோபர் 10 அன்று வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கி தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்
மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும் (Tamil Edition)
by Amazon Asia-Pacific Holdings Private Limited
Learn more: https://www.amazon.in/dp/
ஞாயிறு, 26 ஏப்ரல், 2020
கொரோனா - அறிவியல் மற்றும் கடவுளர் கொள்கை - பகுதி 2
சிந்துவெளி நாகரிகத்திலோ, அல்லது கி.மு.200க்கு முந்திய தமிழர் நாகரிகத்திலோ, கடவுளை
வணங்கும் முறை யாவும் கருவளத்தை (fertility)
நோக்கியே இருந்தது
(இந்த வளை பகுதியில், ‘நம் வாழிப்பாட்டு முறை’ பார்க்கவும்)) அப்பொழுதைய நம்
வாழ்க்கை முறை அறிவு சார்ந்த அறத்துடன் கூடிய (சென்னை பல்கலைக்கழக அகராதிப்படி, அறம் என்றால் ஒழுக்கம், தர்மம்), வாழ்க்கை முறையாக இருந்தது. அது நம்பிக்கை
சார்ந்தது அல்ல. அறிவு சார்ந்தது. இம்முறையில் நம்
சிந்தனை கூர்மையாக இருந்தது. தேவையில்லாத சடங்குகள்,
அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கைகள் நம்மிடம் இல்லை.
மதுரை காஞ்சியில் (சுமார் கி.மு.200 ல் எழுதப்பட்டது), மதுரையில் கடவுளர்
திருவிழாக்களாக இரண்டு கூறப்படுகிறது. ஒன்று முருகன் பிறந்த நாள் (ஒணம் என்று
கூறப்படுகிறது), மற்றொன்று சிவனுக்காக, 7 நாள் அந்தி விழா (வடமேற்கு பருவகாலமாகிய
அக்டோபர், நவம்பர் மாதத்தில், வைகையில் புது வெள்ளம் வரும் பொழுது, சிவனுக்காக
கொண்டாடப்படும் விழா). இதில் முருகனுக்கு சேவல் பலி கொடுத்தார்கள், சிவனை வைத்து
நடத்தப்படும் அந்தி விழாவில் மாடு, ஆடு பலி கொடுத்து கொண்டாடினார்கள். இந்த விழாக்கள்
எல்லாம் மக்கள் பக்தி மற்றும் சொந்த, பந்தத்தோடு மகிழும் ஒரு நிகழ்வாகவே
கருதியிருக்கிறார்கள்.
அவர்கள் அறிவியலில் மிகவும் சிறந்து இருந்தார்கள். புதை வடிகால் (underground drainage),
அதற்குரிய குழாய்கள், இரும்பு மற்றும் தாமிரமும், அதன்
உலோக கலப்பும் (alloys) சார்ந்த
உலோகத்தொழில் (metallurgy), மெல்லிய தங்க நகை வேலை, முத்து
மற்றும் பவழம் முதலியவற்றில் மெலிதான ஓட்டை மற்றும் அது சம்பந்தமான தொழில், நெசவுத் தொழில் - சேலை வெவ்வேறு வடிவமைப்பில் – பூ வேலைப்பாடுடன்,
சுண்ணாம்பு தொழில், பூவில் இருந்து, நறுமண பொருள் தயாரித்தல்,
சாம்பிரானி தொழில், உணவு கடை, தோல் மிதியடி தொழில், துணிக்கு
கஞ்சி போடும் தொழில், செங்கல் தயாரித்தல் மற்றும் கட்டிடம் கட்டும் தொழில், கரும்பு
ஆலை, தானியங்கும் அம்பு விடும் கருவி, என்று இது போன்ற தொழில்கள் பல
இருந்தன.
அவர்கள் அறிவு சார்ந்து மட்டுமல்ல, அறம் சார்ந்தும் இருந்தார்கள். நீதி வழங்க நீதிமன்றங்களுக்கு பதிலாக, (நீதிமன்றங்கள், கோடு போட்டது போல் சட்டம் மட்டும் பேசும்) அறம் கூறும் அவை
இருந்தது (ஒரே காரியம், சூழ்நிலைக்கு ஏற்ப தர்மம் மாறும்,, உ.தா. ஓருவன் சிறுபிள்ளயாக
இருக்கும் பொழுது அவன் தாய் அவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு கண்டிக்கிறாள்,
ஆனால் அதே தாய் தன் முதுமையில் தன்படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக கண்டிப்பது
தவறு).
சுவாமி விவேகானந்தர் கடவுளை கால்பந்து விளையாடும் பொழுதுகூட காணலாம் என்றார்.
அதன் பொருள், நம் கவனம் முழுவதும் ஒருமித்த கருத்துடன், அவ்விளையாட்டில் இருந்தால்
அதுவே கடவுளைக் காண உதவும். தேவையற்ற சடங்குகளை விட அதுவே சிறந்தது. அதையே தமிழ்
சமுகம் அக்காலத்தில் தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டார்கள். நமக்கு மேல் ஒரு சக்தி
– கடவுள் உள்ளார் என்பதோடு அவர்கள் நின்றுவிட்டு, தன் வேலையை
கண்ணும் கருத்துமாகச் செய்தார்கள்.
கடவுளைக் காண - உணர வேண்டும் என்று நினைப்பவர்கள்
சித்தர்கள் ஆனார்கள். அவர்கள் கடவுள் என்றால் கிட உள், GOD என்றால் go deep என்பதற்கு ஏற்ப, தங்களுக்குள் உள்ள கடவுளைத்
தேடினார்கள். அதற்கு அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்தார்கள். அச்சமயத்தில்
அவர்களுக்கு கிடைத்த மூலிகை அறிவை நமக்கு சித்த மருத்துவமாகக் கொடுத்தார்கள்.
தெளிவாக சிந்திக்கும் திறன் நம் மரபனுவில் உள்ளது. மறந்து போன அந்த கூர்நோக்கி
சிந்திக்கும் திறனை திரும்பவும் தட்டியெழுப்புங்கள். இன்று செய்தி வெளியிடும்
ஊடகங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு, நடுநிலை விடுத்து, ஒரு சார்பான செய்திகளையே
சொல்கிறது. சமூகவலை தளங்களில் பல தகவல்கள் போலியானது. நம்முள் இருக்கும்
கூர்நோக்கி சிந்திக்கும் திறனே, நம்மை இத்தகைய போலி செய்திகளிலிருந்து காக்கும்.
எழுமின், விழிமின், கூர்நோக்கி சிந்திக்கும் திறனை
பெருமின், என்பதே நம் தாரக மந்திரமாக இருக்கட்டும்.
ஜேம்ஸ் கவனவு (James Kavanaugh) நம்புவது போல், என் நம்பிக்கையும்
“குளிர் காலம் வெகு நாட்கள் இருந்துவிட்டது, விரைவில் வசந்த காலம் வரும்” (“Winter has lasted too long, spring will come soon”).
சனி, 25 ஏப்ரல், 2020
கொரோனா - அறிவியல் மற்றும் கடவுளர் கொள்கை - பகுதி 1
கொரோனா இன்று உலக மக்கள்
யாவரையும் பயமுறுத்தும் ஒரு தொற்று
வியாதியாக உள்ளது. இந்த நோயினால் எல்லா நாடுகளும், சுகாதாரம் மற்றும்
பொருளாதாரத்தில், பாதிக்கப்பட்ட்டுள்ளது. இப்பொழுது அனைவரும் சமூக இடைவெளி விட்டு,
கூட்டம் கூடாமல் இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள். இதில், அதிகம் கூட்டம் கூடும்
இடமாகிய அனைத்து மத கடவுள்களின் வழிபாட்டு தளங்களும் அடங்கும்.
முதலில் இந்நோய், மனிதர்களிடம் ஏற்ப்படுத்தி உள்ள அச்சங்களின் வெளிப்பாடுகளையும், அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தும் மனப்போக்கையும் பார்ப்போம். சில இடங்களில் மருத்துவர்களை அவர்கள் வாடகைக்கு
குடியிருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறச் சொல்வதும், இறந்த மருத்துவர்களை
மரியாதையுடன் ஈம காரியங்களை செய்யவிடாமல், மிக மோசமாக நடத்துவதுமாக சிலர்
உள்ளார்கள். மேலும் ஒரு நாடுதான் இந்த நோயை பரப்பியது என்றும், ஒரு மதத்தவர்தான்
பரப்பினார்கள் என்றும் பலவித அவதூறுகள். இச்செயல்கள் யாவும் மிகுந்த மன
வருத்தத்தைத் தரும் செயல்களாக உள்ளது.
இச்சமயத்தில் இதற்கு முன் உலகில் நடந்த இம்மாதிரியான நோய்களைப் பற்றிய
சரித்திர நிகழ்வை சிறிது பார்ப்போம். பிளேக், காலரா, மலேரியா, அம்மை, போலியோ,
எய்ட்ஸ், எபோலா, சார்ஸ் என்று பலநோய்கள். இதில் பிளேக் நோயின் வரலாற்றைப்
பார்ப்போம்.
கி.பி 1347லிருந்து 1354 வரை கருப்பு சாவு (black death) என்று அழைக்கப்பட்ட, பிளேக், ஜரோப்பிய கண்டத்தையே புரட்டிப் போட்டது.
அது 1340 களிலேயே இந்தியா, சீனா, பாரசிகம், சிரியா மற்றும் எகிப்த்தை தாக்கியது.
இந்த நோயால் ஜரோப்பாவில் சுமார் 3 கோடி மக்கள் இறந்தார்கள். இது ஆடு, மாடு மற்றும்
கோழிகளையும் தாக்கியது. பதற்றம், அச்சம் காரணமாக மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க
மறுத்தார்கள். மத குருமார்கள் இறந்தவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்ய மறுத்தார்கள்.
வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்க மறுத்தார்கள்.
இது கடவுளின் தண்டனை என்று கருதி, தங்கள் மதகோட்பாடுகளுக்கு மாற்று கருத்துள்ள
பிற மதத்தவரை – குறிப்பாக யூதர்களைக் கொன்று குவித்தார்கள். மேலும் மததீவிர
பற்றுள்ள – கசைநோன்பாளர்கள் (flagellants) கூர்மையான ஆணிகள் உள்ள
கடினமான தோல் சவுக்கில் தங்களை தாங்களே அடித்துக் கொண்டார்கள்.
ஆனால் இம்மாதிரி எந்த செயலுக்கும் இந்நோய் கட்டுப்படவில்லை. கடைசியில் இவர்கள்
நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி போன்ற செயல்களால் இந்த நோயை
கட்டுப்படுத்தினார்கள்.
இதே பிளேக் செப்டம்பர் 1896ல் மும்பை, கொல்கட்டா போன்ற நகரங்களைத் தாக்கியது.
மும்பையில் மட்டும் டிசம்பர் வரை, வார வாரம் 1900 மக்கள் இறந்தார்கள். மொத்தம்
இந்தியாவில் 1 கோடி மக்கள் இறந்தார்கள். இதன் காரணமாக அப்பொழுதைய பிரிட்டிஷ்
அரசின் கீழ் இயங்கிய சுகாதாரத்துறை, காவல்துறை உதவியுடன் நோயுற்றோரைத் தேடுவதும்,
அவர்களைத் தனிமைப்படுத்துவதும், பயணக் கட்டுப்பாடு, போன்ற கடும் நடவடிக்கைகளை
மேற்கொண்டனர். இது அரசியலாகி, 1897ல் புனேயில் இரண்டு சாபேகர் சகோதரர்கள் (chapekar brothers) புனே சிறப்பு பிளேக் கமிட்டி
தலைவரான வால்டர் சார்லஸ் ராண்ட் (walter charles rand) என்ற இந்தியன் குடிமுறை பணி அதிகாரியை (Indian civil Services Officer), சுட்டுக் கொன்றனர்.
ஆக பிளேக், அரசியல், மத, பொருளாதார தாக்கத்தை சமுதாயத்தில் உண்டாக்கியது. 20ம் நூற்றாண்டில் தடுப்பு ஊசி கண்டு பிடித்த பின்னரே, இந்த
நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினார்கள். இன்று கொரோனாவும் அதே நிலைக்கு உலகத்தை கொண்டு வந்துள்ளது. இது நம்மை நாமே தீவிரமாக ஆராய
வேண்டிய தருணம்.
சனி, 28 செப்டம்பர், 2019
கீழடி அகழ்வாராய்ச்சியும், சங்க இலக்கியமும்
353 செ.மீ (11.58 அடி) ஆழத்தில் கிடைத்த
பொருள்கள் கொண்டு பகுப்பாய்வு செய்ததில், கீழடியின் காலம்
கி.மு. 580 என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 200 செ.மீ (6.50
அடி) ஆழத்தில் கிடைத்த பொருள்கள் பகுப்பாய்வில், அதன் காலம் கி.மு 214 மற்றும் கி.மு 174 என்று தெரிய வந்துள்ளது. அதாவது கி.மு. 600 லிருந்து 174 வரை அந்த ஊர் இருந்ததற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது.
இதில் கால அளவு மற்றுமல்லாது நாம்
கவனிக்க வேண்டியது, இங்கு கிடைத்த பொருள்கள். இலக்கியம் என்று கூறி சரித்திர ஆதாரமாக
ஏற்க மறுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில், குறிப்பாக மதுரை காஞ்சி, நெடுநல்வாடை, - அடங்கிய பத்துபாட்டு, அகம், புறம், மற்றும் சிலம்பு, இவைகளில் இங்கு
கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
மதுரை காஞ்சி
1)
வரி
90-91 - கிணறு
2)
வரி
93 - பூட்டு
3)
வரி
258 - கரும்பு இயந்திரம்
4)
வரி
315-316 - முத்து, சங்கு கீறியறுத்த வளையல்
5)
வரி
400-401 - சங்கு சுட்ட சுண்ணம்பு
6)
வரி
421-422 - செம்பில் செய்த பொருள்
7)
வரி
433 - சிவந்த நுண்ணிய பூவேலைபாடுடைய சேலை
8)
வரி
519-22 - சிறிய, நெடிய மடிப்புடவை
9)
வரி
637-641 - கூரிய கத்தி
10) வரி 721 - கஞ்சியிட்ட புடவை
11) வரி 730 - கல்லால் செய்த சாக்கடை நீர்கடத்தும் வாய்க்கால்
புறம்
1)
பாடல்
24 – வரி 32-33 - வளையல்
2)
பாடல்
233 – வரி 3-4 - பொன்னாற் செய்யப்பட்ட திகிரி(சக்ராயுதம்)
3)
பாடல்
274 – வரி 1-2 - பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை
திருமுருகாற்றுப்படை
வரி 15 - பூவேலைப்பாடு உள்ள சிவப்பு உடை
நெடுநல்வாடை
வரி 95-97 - மாடியில்
விழும் மழை நீர் கடத்தும் குழாய்
சிலம்பு ஊர்காண்
காதை
1)
வரி
145-147 - சுடுமண் ஒடு, செங்கல்
2)
வரி 205-207 - பருத்தி, எலிமயிர் (linen), பட்டு நூல் என பலவகை நூல்களால் செய்யப்படட மடிப்புடவை , ஆடை
ஆதலால் இந்திய வரலாற்றை, சங்க இலக்கியங்களை கொண்டு மாற்றி எழுத வேண்டும்.
திங்கள், 15 ஜூலை, 2019
மதுரை நகருக்குள் அகழாய்வின் அவசியம்
https://tamil.thehindu.com/tamilnadu/article28427038.ece/amp/?__twitter_impression=true
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகனம் நிறுத்தும் இடமா?- மதுரையில் பார்க்கிங் வசதிக்காக தோண்டியபோது தென்பட்ட பழங்கால மண்டபம்
Published :
14 Jul 2019
09:41 IST
Updated :
14 Jul 2019
09:41 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட்டை
அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு பார்க்கிங் வசதி கட்டப்படும் இடத்தைத்
தோண்டியபோது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.
*********************************************************************************
மேற்கண்ட செய்தி என் மனதை பதர வைக்கிறது. ஏற்கனவே, கீழமாசி வீதி காவல் நிலையம், விளக்குதூண் அருகில் தெருமட்டத்திலிருந்து 10 அடிக்கும் கீழே இருந்த கழிப்பறை, கீழ ஆவணிமூல வீதியில் புதுமண்டபம் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ரவுண்டாணா, போன்ற மதுரையின் பழமை சின்னங்கள், சமீபகாலங்களில் அழிக்கப்பட்டன.
சங்ககால, மதுரை காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் அங்காடி அமைந்த இடம் என்று என் ஆய்வில் குறிப்பிட்ட இடம் இது. இதே போல் மீனாட்சி பார்க், அரண்மனை அமைந்த இடம். இவை இரண்டையும் அகழ்வாய்வு செய்யவேண்டும் என்று அப்பொழுதைய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
இப்பொழுது அதே இடத்தில் இக்கண்டுப்பிடிப்பை மூடி மறைக்கவே முயல்வார்கள். தற்பொழுது உள்ள மதுரை பாரளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடசன், மதுரையின் பழமையை காக்க நினைப்பவர். அவர் மதுரை பாரம்பரிய நகர் என்று அறிவிக்க நினைப்பவர். அவர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றால் ஏதாவது நடக்கும் என்று எண்ணுகிறேன்.
இவரின் அறிமுகம் யாருக்கவாது இருந்தால், எனக்கு அவரை சந்திக்க உதவவும்.
மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் 1-ல் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரண்டாவது கீழ்தளத்தில் 1,185 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
அதேபோல் 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைதளம் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் வழங்கல், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் என பல்வேறு வசதிகள் இங்கு இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் பூமிக்கடியில் பழங்கால மண்டபம், தூண்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருகிலேயே செங்கல் கட்டுமானமும் தெரிகிறது.
ராணி மங்கம்மாளின் அரண்மனையும் அவர் சிறை வைக்கப்பட்ட இடமும் இந்தப் பகுதி தான் என உறுதி செய்யப்படாத செவி வழிச் செய்தி இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தில் வாகன நிறுத்தும் இடம் கட்டக்கூடாது. அந்த இடத்தை அகழாய்வு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசும் வரலாற்று ஆய்வாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என மதுரை வாசிகள் கூறுகின்றனர்.
*********************************************************************************
மேற்கண்ட செய்தி என் மனதை பதர வைக்கிறது. ஏற்கனவே, கீழமாசி வீதி காவல் நிலையம், விளக்குதூண் அருகில் தெருமட்டத்திலிருந்து 10 அடிக்கும் கீழே இருந்த கழிப்பறை, கீழ ஆவணிமூல வீதியில் புதுமண்டபம் எதிரிலிருந்த வசந்தன் குளம் என்ற ரவுண்டாணா, போன்ற மதுரையின் பழமை சின்னங்கள், சமீபகாலங்களில் அழிக்கப்பட்டன.
சங்ககால, மதுரை காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் அங்காடி அமைந்த இடம் என்று என் ஆய்வில் குறிப்பிட்ட இடம் இது. இதே போல் மீனாட்சி பார்க், அரண்மனை அமைந்த இடம். இவை இரண்டையும் அகழ்வாய்வு செய்யவேண்டும் என்று அப்பொழுதைய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
இப்பொழுது அதே இடத்தில் இக்கண்டுப்பிடிப்பை மூடி மறைக்கவே முயல்வார்கள். தற்பொழுது உள்ள மதுரை பாரளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடசன், மதுரையின் பழமையை காக்க நினைப்பவர். அவர் மதுரை பாரம்பரிய நகர் என்று அறிவிக்க நினைப்பவர். அவர் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றால் ஏதாவது நடக்கும் என்று எண்ணுகிறேன்.
இவரின் அறிமுகம் யாருக்கவாது இருந்தால், எனக்கு அவரை சந்திக்க உதவவும்.
வியாழன், 19 அக்டோபர், 2017
கீழடி காலம் - மேலும் சில தகவல்கள்
கீழடி பற்றி The Hindu நாளிதழில் கீழ்கண்ட தகவல்கள் 1-10-2017 வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்வது, 2016 ஆண்டு வரை தோண்டப்பட்ட குழிகள்
4.5 மீட்டர் (14.75 அடி) ஆழம். அதில் கார்பன் கால நிர்ணயத்திற்கு (carbon dating) எடுக்கப்பட்ட மாதிரிகள் 2 மீட்டர்
(6.50 அடி) ஆழத்தில். இதன் கால அளவு 2160+30 மற்றும் 2200+30 அதாவது கி.மு.174-144
மற்றும் கி.மு.214-184. இது 6.50 அடி ஆழத்தில் கிடைத்த மாதிரி. இதுவே இன்னும் ஆழத்தில்
கிடைக்கும் மாதிரியாக இருந்தால் இக்காலத்திற்கு முந்தியதாக இருக்குமேயல்லாமல்
பிந்தியதாக இருக்காது.
தற்பொழுதைய ASI கண்காணிப்பாளர் திரு. P.S.ஸ்ரீமான் இந்த மூன்றாவது அகழ்வாய்வில் உடைந்த, துண்டு துண்டான சேதாரமான சுவர்
இருந்ததாகவும், அது முந்தைய கட்டுமானமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதில் எடுக்கப்பட்ட மாதிரிகள் கார்பன் கால ஆய்வுக்கு பின் கீழடியின் காலம்
இன்னும் பின்னால் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
‘சங்ககால மன்னர்களின் கால நிலை’ – Dr.பத்மஜா ரமேஷ், V.P.புருஷோத்தமன், அவர்களின் புத்தகத்தின் படி கி.மு 325- 300ல் கொற்கையைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியன் நெடுந்தேர் செழியன் என்ற நெடியோன் (இவன் பூதபாண்டியன்
– தேவி பெருங்கோட் பெண்டு வின் மகன்), அப்பொழுது மதுரையை ஆண்ட அகுதையைப் போரில்
வென்று மதுரையைக் கைப்பற்றி, மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை விரிவுபடுத்தியதாக
அகம், புறம் பாடல்களில் உள்ளதை குறிப்பிடுகிறார்கள்.
பாண்டியர்கள் போரிடும் முறையில் முக்கியமானது, எதிரி நாட்டின் எல்லையில் உள்ள
ஊர்களை அழித்து வீடுகளை தரைமட்டமாக இடித்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை
விரட்டியடித்து, வழுவான ஆண்களை போர்க் கைதியாக பிடிப்பது (புறம் 57 காரிக்கண்ணனர்,
இலவந்திகைப் பள்ளி துஞ்சிய பாண்டியன் நன்மாறனுக்கு எதிரியை அழிக்கும் முறை பற்றி
கூறுவது) அவ்வகையில் பார்க்கும் பொழுது மதுரை மீது படையேடுத்து வரும்பொழுது,
வழியில் உள்ள கீழடியை அழித்திருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
இப்பொழுது கி.மு 214 என்றுள்ள கார்பன் கால நிர்ணயம் (carbon dating), தற்பொழுது சேதமடைந்த
சுவற்றில் எடுக்கப்பட்ட மாதிரியின் கார்பன் கால நிர்ணய சோதனைக்கு பின், கி.மு.325-300 என்று முடிவு
வந்தால், நெடியோனின் படையெடுப்பு காலத்தோடு ஒத்துப்போவதால் அவன் படையெடுப்பின்
காரணமாக கீழடி அழிந்ததை உறுதிப்படுத்தலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கார்பன் கால நிர்ணயத்திற்கு எடுக்கும்
மாதிரிகள் கரிமச் சேர்மானம் (organic matters) உள்ள பொருட்கள் மட்டுமே ஆகும். சில உதாரணங்கள் – மரத்துண்டு,
மரக்கரி, எலும்பு, எரிந்த எலும்பு, நத்தை ஒடுகள், தேங்காய் நார்க்கழிவுகள்,
தந்தம், காகிதம், துணி, விதைகள், தாணியங்கள், சமைத்த உணவுகள், களிமண் செங்கல்
நடுவில் உள்ள வைக்கோல், சுட்ட செங்கல் போன்றவைகள்.
திங்கள், 10 ஜூலை, 2017
மதுரையை UNESCO பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இயலுமா
2500 வருடத்திற்கு மேல் உள்ள நம் மதுரையை, பாரம்பரிய நகராக UNESCO அங்கிகரிக்க நடவடிக்கை எடுக்க நம்மால் முடியவில்லை, ஆனால் குஜாராத் முதலவராக 2010 ல் இருந்த திரு.மோடி, தகுந்த நடவடிக்கை எடுத்து இன்று பாரம்பரிய நகர பட்டியலில் அகமதப்பாத்தை கொண்டு வந்துயுள்ளார். நானும் nammamaduraiorg.blogspot.in ல் என்ன என்ன ஆதாரங்கள் UNESCO க்கு மதுரை பாரம்பரிய நகராக அறிவிக்க குடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளேன், ஆனால் இதற்கு ஒரு இயக்கம், குழு, அரசு என்று பலபேர் சேர்ந்தாலே செய்ய முடியும். இந்த கனவு நடக்குமா?
The Walled City of Ahmedabad, founded by Sultan Ahmed Shah in the 15th century, has been declared India’s first World Heritage City.The World Heritage Committee (WHC) of UNESCO made the announcement l
THEHINDU.COM
ஞாயிறு, 18 ஜூன், 2017
ஆரியர்கள் வெளியில்யிருந்து இந்தியா வந்தவர்கள்
இந்தியாவிக்கு வெளியிலிருந்து வந்த ஆரியர்கள், அன்றும், இன்றும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் - பாண்டியர்களின் மொழிப்பற்றும், தன் எல்லையை பாதுக்காப்பதில் ruthless ஆக இருந்ததிற்கு காரணம் இவ் ஆரியர்களின் இந்திய துனைகண்டம் மூழுவதுமியிருந்த நம் தமிழ் மொழியை அழித்து இந்தோ-ஜரோப்பிய மொழியை புகுத்தியதே
http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece#comments
நன்றி; The Hindu
http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece#comments
நன்றி; The Hindu
புதன், 22 மார்ச், 2017
கீழடியும் நெடுந்தேர் பாண்டியனும்
கீழடியின் காலம் கி.மு.200 என்று கார்பன் டேட்டிங் முடிவு கூறியுள்ளது. இதற்கு
பிழை விளிம்பு (margin of error) எவ்வளவு என்று தெரியவில்லை. சில முடிவுகளில் ± 500 வருடங்களும் சிலவற்றில் 200 வருடங்களும் உள்ளது. இது ஆய்வு செய்யும் பொருட்களைப்
பொருத்து அமையும்.
கொற்கையை ஆண்ட பாண்டியன் நெடுந்தேர் செழியன் அப்பொழுது மதுரையை ஆண்ட அகுதையுடன்
போரிட்டு வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசை அமைத்து ஆண்டதாக
அகநானுறு 296 வரி 10-13 கூறுகிறது.
அகுதை பற்றி ஜந்து சங்க பாடல்கள் கூறுகிறது. புறம் 347 வரி 5-7 அகுதை கூடலை
ஆண்டதைக் கூறுகிறது. புறம் 233 வரி 2-4 அகுதை சக்கராயுதம் வைத்திருந்தும் போரில்
இறந்ததாகக் கூறுகிறது. இந்த போர் அநேகமாக நெடுந்தேர் செழியனுடன் ஆன போராக இருக்க
வேண்டும். அகம் 76 வரி 2-3 அகுதை கள்ளுடன் இருப்பதைக் கூறுகிறது. அகம் 113 வரி 4-8
கூடல் அகுதையின் ஆட்சியின் கீழ் இருக்கும்பொழுதே மூதூர் என்று அழைக்கப்பட்டது.
மேலும் அவன் கோட்டையை கோசர் பாதுகாத்தனர் என்றும், கூடல் எப்பொழுதும் மக்களின் ஆரவாரங்கள்
நிறைந்து காணப்பட்டது (பல்வேறு திசைகளில் – நாடுகளிலிருந்து வியாபாரத்திற்கு வரும்
மக்களால் உண்டான ஆரவாரம் – இதே நிலை மதுரை காஞ்சியிலும் கூறப்பட்டுள்ளது. மதுரை
காஞ்சி பாண்டியர்களின் ஆட்சி – கிமு 200 – அகுதை காலத்திலும் இதே நிலை என்பதால்,
பாண்டியர்கள் கைப்பற்றும் முன்பே மதுரை வியாபார நகரமாக இருந்துள்ளது என தெரிகிறது)
அகம் 208 வரி 5-9, 15-18, அகுதையின் நன்பன் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
மிஞ்சிலியோடு செய்த போரில் இறந்ததாகவும் அதற்கு பழி தீர்க்க பெரும் படையையுடைய
அகுதை அவனோடு போரிட்டான் என்கிறது. .
இதில் நமக்கு தெளிவாவது, மதுரை அகுதை காலத்திலேயே மூதூர் அதாவது – 300. 500 ஆண்டு
காலம் பழமையான நகரம் என்று எடுத்துக் கொள்ளலாம். கூடல் அவன் காலத்திலேயே வியாபார
முக்கியத்துவம் வாய்ந்த நகராக இருந்திருக்கிறது. மேலும் அவன் கோட்டையைக் காக்கும்
படை வீர்ர்கள் கோசர்கள் என்பதைக் கொண்டு பார்க்கும் பொழுது அவனுக்கு ரோமர்கள்,
கிரேக்கர்களோடு தொடர்பு (அனேகமாக வியாபாரத் தொடர்பு) இருந்திருக்கிறது.
மதுரையைக் கைப்பற்றிய நெடுந்தேர் செழியன் காலம் கி.மு 325-300 என்று Dr.பத்மாஜா ரமேஷ் , V.R.புருஷோத்தமன் ‘சங்க கால மன்னர்களின் கால நிலை’ பகுதி 1 – (Pub. By International
Institute of Tamil Studies, Chennai) என்ற தங்கள் ஆய்வில் கூறியுள்ளார்கள். அவன் ஆண்ட கொற்கை ஒரு
சிறிய நாடு. அதற்கு அடுத்து வைகையைச் சுற்றிய வளமான ஊர்களை கொண்ட மையல் நாடு.
இதற்கு அடுத்து அகுதை ஆண்ட கூடல் (மதுரை). கொற்கையை ஆண்ட பூதப்பாண்டியனும்
(நெடுந்தேர் செழியனின் தந்தை) மையலை ஆண்ட மாவனும் நண்பர்கள். ஆதலால் நெடுந்தேர்
செழியன் தன்படையுடன் மையல் நாட்டு படையையும் சேர்த்து மதுரையைத்
தாக்கியிருக்கலாம்.
பாண்டியர்களின் போர்த்தாக்குதல்களில் உள்ள ஒரு தந்திரம், எதிரியை தாக்கும்
பொழுது எல்லைப் பகுதியில் உள்ள ஊர்களை அழிப்பதும் அதைச் சுற்றியுள்ள வயல்களின்
கதிர்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும். புறம் 57 வரி 5-11 ல் இதுபற்றிக்
கூறப்பட்டுள்ளது.
கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம் கி.மு.200 என்று கார்பன் டேட்டிங்
கூறுகிறது. பிழை விளிம்பு (margin of errors) 120 ஆண்டு என்றால் அது கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன்
மதுரை மீது படையெடுத்த சமயம். பாண்டியர்கள் தங்கள் போர் தந்திரப்படி மதுரை
எல்லையில் உள்ள கீழடியை அழித்து மதுரையை நோக்கி முன்னேறி போர் செய்திருக்கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







