நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

நம் மதுரை – தமிழர்களின் கலாச்சார, வரலாற்று சின்னங்களை அழிவிலிருந்து காக்க hip hop பாடல் – ஒரு சிந்தனை



பாண்டியர்கள் யார், அவர்கள் மொழி பற்றுக்கு காரணம் என்ன என்பதைப்  பற்றி, ‘Vestiges of Indus civilization in old tamil’ – ஜராவதம் மகாதேவன், இராகவயங்கார் அவர்களின் ‘வேளிர் வரலாறு’, ‘The roots of Hinduism – The early Aryans and the Indus Civilization’ by Asko Parpola, ‘The murderous bride : Tamil versions of the myth of Devi and buffalo demon’ by David Shulman, ‘Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study’ by  Iravatham Mahadevan – இவைகளை வைத்து பாண்டியர்களை பற்றி எழுத எண்ணியிருந்தேன். ஆனால் ஏதொ ஒரு தடை காரணமாக எழுத இயலவில்லை.

தற்சமயம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகள் பற்றி வந்த ‘kodikanal save’ hip hopம், ஜல்லிக்கட்டு பற்றி வந்த ‘தக்கறு தக்கறு’ hip hopம், சிறிது யோசிக்க வைத்தது. மதுரையின் வரலாற்று சின்னங்கள், மற்றும் கலாச்சாரம், நகரமயமாக்களால் அழிவிலிருந்து காக்க, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வர, hip hop பாடல் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பாடல் வரிகள் என்னால் அமைக்க முடிந்தாலும், அதற்குரிய இசை, வீடியோ காட்சிகளை, அதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களால் மட்டுமே செய்ய இயலும். என்னுடைய இப்பிளாக்கை படிப்பவர்கள், உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் prabhakaranvak@gmail.com, மற்றும் கைபேசி 9597950427