நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

புதன், 2 செப்டம்பர், 2015

கீழடி பள்ளிசந்தை அகழ்வாராய்ச்சி களம் நோக்கி ஒரு பயணம்




மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் சிலைமானில் வலது பக்கம் திரும்பி ஒரு 3 கி.மி.ல் ரோட்டிலிருந்து 1கி.மி. செல்லும் ஒத்தையடி பாதையில் தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. பொதுவாக அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் வெட்டவெளி – ஒன்றும் விளையாமல் பொட்டல் காடாக இருக்கும். ஆனால் இது ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில், இரண்டு தனியார்க்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

மதுரைக்கு மிக அருகில் – 15கி.மி. தூரத்தில் அமைந்துயுள்ளது இவ்விடம். மதுரையின் வரலாற்று ஆய்வுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக பள்ளிசந்தை அமையவுள்ளது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் சங்க இலக்கியங்களில் கூறப்படும் பெருமணலாக இருக்க வாய்ப்புயுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஆய்வு செப்டம்பர் மாதத்தோடு முடிக்கப்பட்டு அந்நிலத்தை திரும்ப அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று தெரிகிறது. உரிய அனுமதி கிடைத்தால் மேலும் ஆய்வு மேற்கொள்ள எண்ணியுள்ளார்கள்.

இந்த ஆய்வில் இந்த ஊரின் கட்டிட அமைப்பு, செங்கல் அடுக்கும் முறை, இருசெங்கலுக்கு நடுவில் உள்ள சாந்தின் (binding material) தன்மை, அஸ்திவாரம் (foundation) தன்மை, கழிவு நீர் வாய்க்கால் அமைப்பு, மற்றும் அவர்கள் வாழ்வியல் சார்ந்த விசயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

இந்த அகழ்வாய்வைப் பற்றி தனது புகைப்படங்களால் நம்மை அங்கு நேரில் சென்ற அனுபவத்தை மதுரையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஜனக் (Sriram Janak) தனது Madurai Calling என்ற முகநூல் பக்கத்தில் (facebook page) பதிவு செய்துள்ளார். அவரின் அனுமதி பெற்று இங்கு நான் திரும்ப பதிவு செய்துள்ளேன்.





உறை கிணறு

 கழிவுநீர் கால்வாய்



 செங்கல் சுவர்






 சிறு போர் கருவிகள்


பானை துண்டு - மீன் சின்னத்தோடு


 தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை துண்டு

 நெல் குதிர்