நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.
சனி, 23 மே, 2015
செவ்வாய், 19 மே, 2015
நீர் மேலாண்மை – water management
இப்பொழுது
பரவலாக பேசப்படுவது நீர் மேலாண்மை, watershed programme போன்ற வார்த்தைகள்.
ஆனால் சங்ககாலத்திலேயே இம்மாதிரி technical வார்த்தைகள் இல்லாமல் நம் முன்னோர்கள் நீரை judicialஆக பயன்படுத்தினார்கள்.
சேர நாடு நீர்
நிறைந்த (கேரளத்தின் பெரும்பகுதி உள்ளடக்கியது) பகுதி. சோழ நாடு வற்றாத காவிரி
உள்ள ஒன்று. பாண்டிய நாட்டில் தாமிரபரணி வற்றாத நதி. ஆனால் வைகை ஒரு காட்டாறு.
வருடத்தின் பெரும் பகுதி நீர் இருக்காது. பாண்டியர்களுக்கு நீர் மேலாண்மை
அவசியமாகியது. அவர்கள் வைகையின் கீழ் பகுதியில் (தென் கரை பகுதி) தொடர் நீர் நிலைகளை
ஏற்படுத்தினார்கள். அதாவது ஒரு கண்மாய் நிறைந்தால் அதிக நீர் வெளியேறிஅடுத்த கண்மாய்
நிறையும். இதை வைகையின் அதிக வெள்ள நீரை கொண்டு செய்தார்கள். இது விருதுநகர்,
இரமாநாதாபுரம் மாவட்டங்கள் பயன் படும்படி அமைத்தார்கள். இதில் திருமங்கல்ம்,
அருப்புகோட்டையில் ஒடும் நதியோடு இணைத்தார்கள்.
மேலும்
வைகையின் வடக்கு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலை, சிறுமலையில் வடியும் மழை நீரை தொடர்
கண்மாய்களில் தேக்கி, அதிக நீர் ஆங்காங்கே வைகையில் வடிவதற்கு வழி செய்துள்ளார்கள்.
ஆக வைகையின் வடபுறம், தென்புறம் இருபக்கமும் தொடர் கண்மாய்களும், வடபக்கம் கண்மாய்கள்
அதிக நீரை வைகையில் கலக்க அது தென்புறகண்மாய்கள் நிறைய வழி செய்துள்ளார்கள்.
மேலும் வைகை நதியை மற்ற சிறிய நதிகளோடு இணைத்துள்ளார்கள்.
மதுரை
நகருக்குள் கிருதுமாலும், வைகையும் மாலை போல் சூழ்ந்து, நீர் நிறைந்திருந்தது.
ஆனால் கண்மாய்களின் முக்கியத்துவம் தெரியாமல் 60- 70களில் மத்திய பஸ்நிலையும்,
மாவட்ட நீதிமன்றம், வானொலிநிலையும், சட்டக்கல்லூரி, வக்போர்ட் கல்லூரி, வணிகவரி
அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், கட்டியுள்ளோம். இன்றும் நீர் தட்டுபாடு ஏற்பட்ட பின்பும்
நாம் பாடம் கற்கவில்லை. உயர்நீதிமன்ற மதுரை கிளை, உலக தமிழ் சங்கம் கண்மாய்களில்
அமைந்துள்ளது. இது போக கண்மாய்களை இணைக்கும் வரத்து கால்வாய்கள், கண்மாய்களின்
கரையோரங்களை ஆக்கிரிமிப்பது, ரோடு அகலப்படுத்த கால்வாய்களை குறுக்குவது போன்ற
செயல்களை செய்கிறோம். வைகை ஆற்றையும் குறுக்கி ரோடு போடப்பட்டுள்ளது.
இன்று talk of the town – smart city.
இதைதானே 1000
வருடம் முன் மதுரையை ஆண்டவர்கள் செய்தார்கள். கோவிலை விரிவுபடுத்த நினைத்த பொழுது,
அவர்கள் முதலில் செய்தது நகரை விரிவுபடுத்தியது. ஆதாவது இருக்கும் infrastructureக்குல் குண்டு சட்டி ஒட்டாமல், நகரை விரிவுபடுத்தி பின்
கோவிலை விரிவுபடுத்தினார்கள். இன்று நாம் இருக்கும் infrastructureஐ விரிவுபடுத்தாமல் கட்டடங்களைக் கட்டுகிறோம். எ.க. - ராஜாஜி
மருத்துவமனை விரிவாக்கத்தை அதே ரோட்டில் கலெக்டர் ஆபிஸ் பஸ் நிலையத்தில்
கட்டினார்கள். தற்சமயம் அதன் எதிர்புறம் மற்றுமொரு விரிவாக்க மருத்துவமனை
கட்டுகிறர்கள். இக்கட்டடங்களால் இந்தரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு,
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, சாக்கடைநீர் அதிகரிப்பதற்கு தகுந்தார்போல் underground drainage redesign,
குடிநீர், மருத்துவகல்லூரி மைதானத்திற்கு மாற்று இடம்,
பஸ்நிலையத்திற்கு மாற்று இடம் என்று எதுவும் கிடையாது.
மதுரை
நகருக்குள்ளும், சுற்றிலும் உள்ள விரிவாக்க பகுதிகளிலும் கண்மாய்களும், கால்வாய்களும்
ஒடுவது மதுரையின் நிலத்தடி நீர் குறையாமல் இருக்க உதவக்கூடிய ஒன்று. ஆனால் இன்று
நாம் அதை சாக்கடை நீர் செல்லும் ஒரு கழிவு நீர் கால்வாயாக மாற்றியுள்ளோம். நீண்ட
தூரம் நிலத்தடியில் குழாய் பதித்து மத்திய கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலைக்கு (Effluent Treatment Plant) எடுத்து செல்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
குழாய் அடைப்பு, pumping station மோட்டார் பிரச்சனை என்றுள்ளது. இதற்கு பதில் சிறு சிறு கழிவு நீர் ஆலை அந்தந்த
பகுதிகளில் நிறுவி, சுத்திகரிக்கப்பட்ட நீரை இக்கால்வாய்களிலோ அல்லது வைகையிலோ
விடும் பொழுது நிலத்தடி நீரும் உயரும், மறுசுழற்சி நீர் கால்வாய்கள் மூலம் கண்மாய்களை
நிறைக்கும் பொழுது, விவசாயம் நடக்கும் பகுதிகளில் அதை பயன் படுத்த முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)