நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

திருநெல்வேலி மாவட்டத்தில் பாண்டிய நாட்டு குடவரை கோவில்கள் – I

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பாண்டியர்களின் குடவரை கோவில்களைப் பற்றி நாம் பார்ப்போம். மலையடிக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோவில், வீரசிகாமணி கைலாசநாதர் கோவில், திருமலபுரத்தில் உள்ள பசுபதிஸ்வர் கோவில் – இது ASI யின் கீழ் உள்ளது, மற்றும் அனையூரில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி கோவிலும் உள்ளது. இதில் முதலில் மலையடிக்குறிச்சி மகாதேவர் கோவிலைப் பார்ப்போம். இது பாறையைக் குடைந்து கல் தூண் அமைத்து கர்ப்பக்கிரகத்தில் லிங்கம் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி,600 -650 ஆக இருக்கக்கூடும். இந்தத் தூண் அமைப்பு அதை உறுதி செய்கிறது. பின்னால் கி. பி. 700-800 ல் இந்த குடவரைக்கு முன் கல் தூணுடன் கூடிய ஒரு மண்டபமும் அதில் ஒரு தாயார் சன்னதியும் உள்ளது. தமிழர்களின் வழிபாடு முறையில் குறிப்பாக பாண்டியர்களின் கோவில்களில் இறைவன் தனியாகவே இருப்பார், அது ஆண் தெய்வமானலும், பெண் தெய்வமானலும் தனியாகவே இருப்பார்கள்.இறைவன் துணையோடு இருப்பது கி.பி.900 பின்னர்தான். திருமுருகாற்றுப் படையிலோ, அல்லது, மதுரை காஞ்சியிலோ இறைவனை துணையோடு வர்ணிக்கவில்லை. இக்கோவில்களுக்கு ராஜபாளையம் – தென்காசி சாலையில், வாசுதேவ நல்லூர் அடுத்து சுப்பிரமணிபுரம் என்ற ஊர் தாண்டி சிறிது தூரத்தில் இடது பக்கம் செல்லும் சாலையில் செல்லவேண்டும். மலையடிக்குறிச்சி அரசாங்க பள்ளிக்கு அருகில் உள்ளது இந்த கோவில். இங்கு உள்ளே செல்லும் பாதையில் ஒரு ஆர்ச் அமைத்துள்ளனர் அதில் கி. பி. 600 ஆம் ஆண்டை சேர்ந்த குடவரை கோவில் என்று எழுதி இருக்கும். இங்கு கதவு பூட்டியிருக்கும் நீங்கள் சீனிவாசன், போன் 7708035222 க்கு அழைத்து கூப்பிட்டால் வந்து கதவை திறந்து விடுவார்கள். உங்கள் போனில் மேப்பில் Malayadikurichi Rock cut temple என்று தேடி, போகும் பாதைக்கு அதை வழிகாட்டியாக வைத்துக் கொள்ளவும்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

சில விளக்கங்கள்

எனது நூல் வெளியீடு சம்பந்தமான பின்னோட்டங்களுக்கு (feedback) சில விளக்கங்களைக் கொடுத்துள்ளேன். முதலில் கிண்டில் வெளியீடு போனில், டேப்லட்டில் படிக்கமுடியுமா அல்லது kindle device வேண்டுமா என்று அணேகருக்கு சந்தேகம் உள்ளது. உங்கள் போன் அல்லது டேப்லட்டில் இந்த நூலை படிக்கலாம். Kindle device தேவையில்லை. Play storeல் kindle app பதிவிரக்கம் செய்து படிக்கலாம். மேலும் உங்களிடம் உள்ள போன், டேப்லட் அணைத்திலும் பதிவிரக்கம் செய்து அவைகளை synchronize செய்யலாம். ஆதலால் நீங்கள் வாங்கிய நூல்கள் அணைத்தும் எதில் வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கு ஏற்ப படிக்கலாம். மேலும் உங்கள் அமேசான் கணக்கே இந்த appக்கும் பொருந்தும் பேப்பர்பேக் தவிர்த்து ஏன் கிண்டில் என்ற கேள்விக்கு பதில் -- பேப்பர்பேக் அளவு 5.5” x 8.5” ஆகும். இந்த அளவில் ஒரு வரைபடத்தைத் (maps) தெளிவாகப் பார்ப்பது சற்று சிரமம். ஆனால் கிண்டில் ebookல் enhanced typesetting உள்ளது. அதில் font அளவு, notes, highlighter, மற்றும் உள்ளடக்கம் மெனு உள்ளது. நீங்கள் உள்ளடக்கத்தில் எந்த உப தலைப்புக்கு போக வேண்டுமானாலும் அதை கிளிக் செய்தால் அந்த பகுதிக்கு சென்றுவிடும். மேலும் ஒரு வரைப்படத்தில் விரல் வைத்து அழுத்தினால் zoom option வரும். அதை அழுத்தினால் அந்த வரைபடம் பெரிதாகும் நீங்கள் உங்கள் விருப்ப அளவில் பார்க்க 2 விரல் வைத்து ஸ்கீரினில் விரித்தால் படம் பெரிதாகும். இந்த வசதி நான் மதுரை வடிவமைப்பில் கூறும் அளவுகள், கோணங்களைப் பற்றி நீங்கள் நன்கு உள்வாங்க உதவும். மேலும் enhanced typesetting நீங்கள் போனில் படித்தால் கூட உங்கள் கண்ணுக்கு அழுத்தம் (strain) தராது. இப்பொழுது எனது நூல் வெளியீடு அக்டோபர் 6 க்கே வெளியிடப்படும். அணைவரும் படித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.

புதன், 30 செப்டம்பர், 2020

மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும்

மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும் என்ற தலைப்பில் எனது ebook amazon.in வழைத்தளத்தில் இப்பொழுது preorder காக பட்டியல் இடப்பட்டுள்ளது. நூல் அக்டோபர் 10 அன்று வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கி தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும்படி கேட்டுக்கொள்ளுகிறேன் 


மதுரை நகரின் வடிவமைப்பு அன்றும் இன்றும் (Tamil Edition)

by Amazon Asia-Pacific Holdings Private Limited

Learn more: https://www.amazon.in/dp/B08KDV6MVW/ref=cm_sw_em_r_mt_dp_QTaDFbGEXE3SJ